இவரை மட்டும் சந்தித்து விட வேண்டும். செம்பருத்தி ஷாபனாவின் ஆசை இது தானாம்.

0
6805
Shabana
- Advertisement -

90 கால கட்டங்களில் இருந்தே தொலைக்காட்சிகளில் தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும் சமீப காலமாகவே ஒவ்வொரு சேனலிலும் டிஆர்பி ரேட்க்காக சூப்பர் ஹிட் சீரியல்களை கொடுத்து வருகிறார்கள். மேலும், மக்கள் படங்களை பார்க்கிறார்களோ? இல்லையோ? தொலைக்காட்சி தொடர்களை தவறாமல் பார்க்கிற காலமாக தற்போது மாறிக் கொண்டு வருகிறது. அது மட்டுமில்லாமல் குடும்பத்துப் பெண்களுக்கு பொழுது போக்கே இந்த சீரியல் தொடர் தான். முதல் எல்லாம் குடும்பப் பெண்கள் மட்டும் தான் தொடர்களை பார்ப்பதில் அதிக ஆர்வம் காட்டி வந்தார்கள். ஆனால், தற்போது ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் சீரியல்களை பார்க்கும் சூழல் உருவாகி உள்ளது.

-விளம்பரம்-
sembaruthi serial shabana க்கான பட முடிவு

- Advertisement -

அந்த வகையில் தமிழக ரசிகர்கள் மத்தியில் அதிக இடம் பிடித்த சீரியல் “செம்பருத்தி” தான். மேலும், இந்த செம்பருத்தி சீரியல் 2017 ஆம் ஆண்டு ஜீ தமிழில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதோடு இந்த தொடர் முழுக்க முழுக்க காதல் பின்னணியை கொண்ட தொடர் ஆகும். அது மட்டும் இல்லாமல் தெலுங்கில் வெளியான ‘முத்த மந்தாரம்’ என்ற தொடரை தழுவி எடுக்கப்பட்டது தான் இந்த செம்பருத்தி சீரியல். இதனை தொடர்ந்து இந்த சீரியலில் ஆதித்யா என்ற கதாபாத்திரத்தில் கார்த்திக்கும், பார்வதி என்ற கதாபாத்திரத்தில் ஷபானாவும், அகிலாண்டேஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் பிரியா ராமனும் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் செம்பருத்தி சீரியலில் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் ஷபானா கேரளாவை பூர்விகமாக கொண்டவர்.

இதையும் பாருங்க : தளபதியை லிப் லாப் அடிக்காமல் விட மாட்டேன். அடம் பிடிக்கும் இருட்டு நடிகை.

-விளம்பரம்-

ஆனால், இவர் பிறந்து, வளர்ந்தது எல்லாமே மும்பையில் தான். சிறு வயதிலிருந்தே ஷபானா அவர்கள் மாடலிங் துறையிலும்,நடனத்திலும் அதிக ஆர்வம் கொண்டவர். எப்போதும் எங்கேயும் நடனமாடிக் கொண்டே தான் இருப்பாராம். மேலும், நடிகை ஷபானா அவர்கள் இந்த செம்பருத்தி தொடரின் மூலம் ஒட்டு மொத்த தமிழக இளைஞர்களையும் தன் பக்கம் ஈர்த்து உள்ளார். நடிகை ஷபானா அவர்கள் வீடு, பள்ளி, கலை விழாக்கள் என ஒன்று கூட விட்டு வைக்காமல் நடனமாடிக் கொண்டே இருப்பாராம். அதுமட்டுமில்லாமல் இவர் ஹோட்டல்களில் கொண்டாடப்படும் பிறந்த நாள் விழாக்களில் தொகுப்பாளராகவும், நடன கலைஞராகவும் தன்னுடைய வாழ்க்கையை தொடங்கி உள்ளார்.

actress shobana க்கான பட முடிவு

மேலும், நடிகை ஷபானா ஏற்கனவே மலையாள சீரியலில் நடித்து உள்ளார். அப்போது தான் தன்னுடைய நடிப்பு பயணத்தை தொடங்கி உள்ளார். ஆகவே இதன் மூலம் தான் இவருக்கு தமிழில் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நடிகை ஷபானாவுக்கு மிகப் பெரிய ஆசை ஒன்று உள்ளது என்று சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்து உள்ளார். அது என்னவென்றால் சினிமா துறையில் நடிகையும், நடன கலைஞருமான ஷோபனாவை சந்திக்க வேண்டும் என்பது தான் இந்த ஆசை. இது தான் இவருடைய வாழ்க்கையில் தீவிர ஆசை என்று கூறி உள்ளார்.

Advertisement