செம்பருத்தி சீரியல் ரசிகர்களுக்கு செம குட் நியூஸ் சொன்ன ஜீ தமிழ்.

0
14930
- Advertisement -

நாடு முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் காட்டுத் தீயை விட வேகமாக பரவி வருகிறது. இதனால் சில மாதங்களாகவே அனைத்து விதமான படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக ஜூன் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்துள்ளது மத்திய அரசாங்கம். சமீபத்தில் தமிழக அரசு சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு மட்டும் சில அறிவுரைகள் படி நடத்த அனுமதி அளித்துள்ளது. அந்த படப்பிடிப்பில் 60 பேரை மட்டும் வைத்துக் கொண்டு படப்பிடிப்பு துவங்கலாம் என்று உத்தரவிட்டுள்ளது.

-விளம்பரம்-
karthikraj hashtag on Twitter

இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் தமிழக அரசு போட்ட உத்தரவின்படி படப்பிடிப்பை தொடங்கி உள்ளது. அது வேற எதுவும் இல்லைங்க. எல்லோருடையும் பேவரட் சீரியல் செம்பருத்தி தான். தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

- Advertisement -

அந்த வகையில் மக்களிடையே அதிக ஆதரவும், அன்பும் பெற்ற சீரியல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியல் தான். இப்போது இருக்கும் டாப் சீரியல்களில் செம்பருத்தி சீரியலும் ஒன்று. இந்த சீரியல் 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்டது. இந்த சீரியல் முழுக்க முழுக்க காதல் பின்னணியை மையமாக கொண்ட தொடர். இந்த தொடர் தெலுங்கு மொழியில் ஒளிபரப்பான முத்த மந்தாரம் என்ற தொடரின் தழுவல். மேலும், இந்த செம்பருத்தி தொடரில் ஆதித்யா என்ற கதாபாத்திரத்தில் கார்த்திக்கும், பார்வதி என்ற கதாபாத்திரத்தில் சபானாவும் நடிக்கிறார்கள்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்க்கின்ற தொடராக செம்பருத்தி உள்ளது. இந்நிலையில் செம்பருத்தி சீரியல் கூடிய விரைவில் டிவியில் வர போவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக அரசின் அறிவுரையின் படி செம்பருத்தி சீரியல் படப்பிடிப்பு துவங்கி உள்ளது. இதை ஜி தமிழ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் செம்பருத்தி சீரியல் ரசிகர்கள் பயங்கர குஷியில் உள்ளார்கள். அதோடு கீழே சரிந்த ஜி தமிழ் தொலைக்காட்சியின் TRP கண்டிப்பாக உயரும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement