ஈகோ பிரச்சனை, நடிகையின் அழுத்தம்- கார்த்திக் விலகினாரா ? விலக்கப்பட்டாரா ?

0
4044
sembaruti
- Advertisement -

செம்பருத்தி சீரியலில் இருந்து கார்த்திக் மாற்றப்பட்டு இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது. தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் இல்லத்தரசிகள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று விடுகிறது. அந்த வகையில் மக்களிடையே அதிக ஆதரவும்,அன்பும் பெற்ற சீரியல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியல் தான். இப்போது இருக்கும் டாப் சீரியல்களில் செம்பருத்தி சீரியலும் ஒன்று. இந்த சீரியல் 2017 ஆம் ஆண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. இந்த தொடரில் ஆதித்யா என்ற கதாபாத்திரத்தில் கார்த்திக்கும், பார்வதி என்ற கதாபாத்திரத்தில் சபானாவும், அவருக்கு ஜோடியாக ஆபிஸ் புகழ் கார்த்தியும் நடிக்கின்றனர்.

-விளம்பரம்-
செம்பருத்தி

தற்போது 800 எபிசோடுகளைக் கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த சீரியல் ஹீரோ கார்த்திக் தானாகவே வெளியேறி இருப்பதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்தது. செம்பருத்தி சீரியலில் இருந்து கார்த்திக் வெளியேறுவதாக வெளியான தகவலை அடுத்து செம்பருத்தி சீரியல் ரசிகர்கள் பலரும் அதிருப்தி அடைந்தவர்கள் அதேபோல கடந்த 9 நாட்களுக்கும் மேலாக செம்பருத்தி சீரியலில் நாயகன் கார்த்திக் இல்லாமலேயே துணை கதாபாத்திரங்களை வைத்து கதை நகர்ந்து வந்தது இதனால் கடுப்பான செம்பருத்தி சீரியல் நடிகர்கள் பலரும் கார்த்தி இந்த சீரியலில் தொடர்வதா இல்லையா கார்த்திக் நடிக்கவில்லை என்றால் செம்பருத்தி சீரியல் புறக்கணிப்போம் என்று கொந்தளித்து வந்தார்கள் ஆனால் ரசிகர்களின் எந்த கேள்விக்கும் ஜீ தமிழ் விளக்கம் அளிக்காமல் மவுனம் சாதித்து வந்தது.

இதையும் பாருங்க : சீரியல் நடிகருக்கு இறுதியாக சித்ரா அனுப்புயுள்ள Voice Note – வைரல் ஆடியோ.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் கார்த்தி, செம்பருத்தி சீரியலில் இருந்து நீக்கப்பட்டதை உறுதி செய்யும் விதமாக ஜீ தமிழ் தொலைக்காட்சி அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருந்தது இந்த தொடரில் இருந்து ஒரு சில எதிர்பாராத காரணங்களுக்காக கார்த்திக் மாற்றப்பட்டு இருக்கிறார். ஜீதமிழ் உடனான அவரது தொடர்பு மேலும் நீடிக்கும் அவரது பயணத்திற்கு எங்களுடைய வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டடு இருந்தது. கார்த்திக் விலகியது குறித்து விசாரித்துள்ள போது, செம்பருத்தி’ சீரியல் நடிகர்களுக்கு இடையே சின்னச்சின்னதாக எழுந்த ஈகோ மோதல்கள் ஒரு கட்டத்தில் மிகப்பெரிதாக வளர்ந்து நின்றதுதான் கார்த்திக்கின் விலகலுக்குக் காரணம் என்கிறார்கள்.

சீரியலின் சீனியர் நடிகை மற்றும் வில்லி நடிகை என இருவரின் ஈகோவுக்குள் கார்த்திக் சிக்கிக்கொண்டாராம். வில்லி நடிகை, கார்த்திக் மாற்றப்படவேண்டும் எனச் சேனலில் தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததாகச் சொல்கிறார்கள். கார்த்திக் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருடைய அப்பா ஒரு தயாரிப்பாளர். சினிமாவில் நடிக்கவேண்டும் என்பதுதான் கார்த்திக்கின் கனவாக இருந்திருக்கிறது. வாய்ப்பு உடனடியாகக் கிடைக்காததால் சீரியலில் நடித்திருக்கிறார். தன்னைவைத்து சீரியலில் இவ்வளவு பிரச்னைகள் என்றதும் சேனல் தலைமையிடம் தான் விலகுவதாக அறிவித்திருக்கிறார். சமாதான முயற்சிகள் எதுவும் பலனளிக்காததால் இப்போது முறைப்படி ஹீரோ மாற்றத்தை அறிவித்திருக்கிறது சேனல்

-விளம்பரம்-
Advertisement