அப்பா லாரி ட்ரைவர், அம்மா கட்டிட வேலை, நான் இந்த வேலையை செய்தேன் – கலங்க வைக்கும் கதிரின் கதை.

0
732
kathir
- Advertisement -

வெள்ளி திரையை விட சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களை தான் மக்கள் அதிகம் ரசித்து வருகின்றனர். அந்த வகையில் அதிக ஆதரவும், அன்பும் பெற்ற சீரியலில் ஒன்று தான் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியல். இப்போது இருக்கும் டாப் சீரியல்களில் ஒன்றாக செம்பருத்தி சீரியல் உள்ளது. இந்த சீரியல் 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்டது. அன்றில் இருந்து இன்று வரை விறுவிறுப்பு குறையாமல் சென்று கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், இந்த சீரியல் முழுக்க முழுக்க காதல் பின்னணியை கொண்ட தொடர். அதுமட்டும் இல்லாமல் இந்த தொடர் தெலுங்கு மொழியில் வந்த முத்த மந்தாரம் என்ற தொடரின் தழுவல் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த தொடரில் ஆதியின் தம்பியாக நடித்து வருபவர் கதிர். இந்த தொடரின் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் முதலில் விஜேவாக இருந்தார்.

- Advertisement -

லாரி ட்ரைவர், கட்டிட வேலை :

பின் நிகழ்ச்சி தொகுப்பாளராக ஆனார். தற்போது சீரியலில் நடிகராக கலக்கி கொண்டு வருகிறார். இந்நிலையில் இவர் சமீபத்தில் பேட்டி ஒன்று கொடுத்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, என்னுடைய அப்பா லாரி டிரைவர். அம்மா கட்டிட வேலைக்கு போனார்கள். அந்த சூழலில் தான் நான் என்னுடைய படிப்பை படித்தேன். பின் கோயில் விழாக்களில் நடனமாடுவேன். பின்னர் அந்த விழா மேடைகளில் தொகுப்பாளராக என் வாழ்க்கையை தொடங்கினேன்.

Here are the lesser-known facts about Sembaruthi star VJ Kathir | The Times  of India

லோக்கல் சேனல் ஆங்கரிங் :

அதற்குப் பிறகு தான் லோக்கல் சேனலில் ஆங்கரிங் வாய்ப்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து பல மேடைகளில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி தற்போது நடிகராக உங்கள் முன் இருக்கிறேன். மேலும், செம்பருத்தி சீரியலில் மூலம் எனக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைத்தது நினைத்து ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. சீரியலில் நடிக்கும்போது எனக்கு ஜில் ஜங் ஜக் என்ற சோவை கொடுத்தார்கள். கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு மேலாக இந்த சோ போனது.

-விளம்பரம்-

தவறிப்போன பெரிய நடிகர் படம் :

பின் இந்த ஷோ முடிந்து ரெண்டு வருஷத்துக்கு பிறகு தான் ‘மாஸ்டர் தி பிளாஸ்டர்’ என்ற நிகழ்ச்சியை கொடுத்தார்கள். நான் முதல் மூன்று எபிசோடு தொகுத்து வழங்கி வந்தேன். ஆனால், எனக்கு தொடர்ந்து சீரியல் சூட்டிங் இருந்ததனால் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியவில்லை. அதனால் அந்த ஷோ விட்டு பண்ண முடியாமல் போனது. அதேபோல் நான் சீரியலில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பெரிய நடிகருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த வாய்ப்பு கைநழுவி போனது.

வெள்ளித்திரை கனவு :

நல்ல கதைக்களம் அமைந்தால் நிச்சயம் வெள்ளித்திரையிலும் நடிப்பேன். மேலும், பெஸ்ட் ஆக்டர் என்ற விருது கிடைத்தது எனக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது. என் ஃபேமிலி இல்லை என்றால் நான் இந்த அளவுக்கு வந்திருக்க முடியாது. என் குடும்பம் தான் என்னுடைய இன்ஸ்பிரேஷன் என்று கூறி இருந்தார். இப்படி இவர் கூறிய தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதோடு இதை பார்த்த ரசிகர்கள் எந்த படம்? எந்த நடிகர்? என்று கேட்டு வருகிறார்கள்.

Advertisement