எப்படி இருக்கிறது கோவை சரளா, அஸ்வினின் ‘செம்பி’ – முழு விமார்சனம் இதோ.

0
955
- Advertisement -

தமிழ் சினிமாவில் நகைச்சுவை ராணி ஆச்சி மனோரமாவுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் காமெடி இளவரசியாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் கோவை சரளா. இவர் தமிழ் சினிமா உலகில் பிரபலமான நகைச்சுவை நடிகையாக திகழ்ந்து கொண்டு இருந்த இவர் சில குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார். இந்த நிலையில் இயக்குனர் பிரபு சாலமன் இயக்கியிருக்கும் “செம்பி” என்ற திரைப்படத்தில் ஒரு குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் தற்போது வெளியாகியிருக்கும் நிலையில் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

கதைக்களம் :

கோவை சரளா கொடைக்கானலில் புலியூரைச் சேர்ந்த பழங்குடி இனத்தை சேர்ந்த பெண் வீரத்தாயி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர் தன்னுடைய 10 வயதுள்ள பேத்தி செம்பியுடன் வசித்து வருகிறார். கொடைக்கானல் காட்டுப்பகுதிகளில் கிடைக்கும் தேனை விற்றுதான் வாழ்ந்து வருகின்றனர். ஒருநாள் கொடைக்கானலை சுற்றி பார்க்க வந்த 3 பேரால் வீரத்தாயின் பேத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறாள். இதனால் உடைந்து போன பாட்டி வீரத்தாயி அந்த குற்றவாளிகளுக்கு எப்படி தண்டனை வாங்கி கொடுத்தார்? யார் அந்த குற்றவாளிகள்? என்பதுதான் மீதி கதை.

- Advertisement -

கோவை சாளரளாவை இப்படத்தில் முற்றிழும் தன்னுடைய உருவத்தை மாற்றி பழங்குடியின மக்களில் ஒருவராகவே தோன்றுகிறார். இவர் இதுவரை நடித்த கதாபாத்திரங்களில் இருந்தும் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்த சாளரவின் ஒரு சில காட்சிகள் கலங்க வைப்பதாக இருக்கிறது. அதேபோல செம்பியாக நடித்த நிலாவும் தன்னுடைய நடிப்பினால் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார். இதன் மூலம் இவருக்கு அடுத்த படம் கிடைக்கும் வாய்ப்பை உறுதி செய்திருக்கிறார்.

மேலும் அஸ்வின், நாஞ்சில் சம்பத், தம்பி ராமையா போன்றவர்கள் தங்களுடைய கதாபாத்திரத்தில் சரியாக நடித்திருந்தனர். உயர்த்த மலைகளில் இயற்கையோடு இயற்கையாக வாழும் வீரத்தாயின் மூலம் நம்மை முற்றிலும் வேறு பரிமாணத்திற்க்கு கொண்டு சென்ற படக்குழு மற்றும் செண்டிமெண்ட் காட்சிகளில் உருகவைக்கும் இசை, எதிர்த்தமான கதாபாத்திரங்கள் என இப்படத்தின் அணைத்து துறைகளிலும் தங்களுடைய முழு உழைப்பை அற்பணித்திருப்பது படத்தில் நன்றாகவே தெரிகிறது.

-விளம்பரம்-

இப்படம் தொடக்கத்தில் கோவை சரளாவை சுற்றி நகர்ந்தாலும் அதற்க்கடுத்து அஸ்வினின் ஹீரோயிசம் கதையை மாற்றுகிறது. அதே போல பேருந்தில் எடுக்கப்படும் காட்சிகள் “மைனா” படத்தை நினையூட்டுவதாக இருக்கிறது. அஸ்வினை கதாநாயகனாக காட்ட எடுக்கப்பட்ட காட்சிகள் சரியாக பொருந்தவில்லை. பார்வையாளர்களை பார்க்க வைக்க வேண்டும் என்று எடுத்தார் போல சில காட்சிகள் இருந்தன. ஆனாலும் படத்தில் கூறப்படும் வசனங்கள், ஒளிப்பதிவு, கோவை சரளாவின் நடிப்பு படத்திற்கு வலுவூட்டுகிறது.

நிறை :

ஒளிப்பதிவு, இசையமைப்பு, ஆடை வடிவமைப்பு அற்புதம்.

கோவை சரளா நடிப்பு தரமாக இருந்தது.

வசனங்கள் அறிவுரை குறும்படியாக இருந்தது.

கே.பிரசன்ன பின்னணி இசையில் பிணியிருந்தார்.

குறை :

தொடக்கத்தில் கதை விறுவிறுப்பாக சென்றாலும் பதிவியில் தடுமாறுகிறது.

அஸ்வினை நல்லவனாக காட்ட எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை.

திரைக்கதையில் கவனம் செலுத்தியிருக்கலாம்.

மொத்தத்தில் சமுதாயத்திற்கு தேவையான படம் எடுக்கும் வழியில் சில தடுமாற்றம்.

Advertisement