பேச்சுலர் லைஃப்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் பிரேம்ஜி, கோலாகலமாக நடக்கும் திருமண வேலைகள்-எங்கு? எப்போது? தெரியுமா

0
200
- Advertisement -

நடிகர் பிரேம்ஜியின் திருமணம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் பிரேம்ஜி அமரன். இவர் சினிமா உலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன் மற்றும் வெங்கட்பிரபுவின் தம்பி ஆவார். இவர் நடிகர் மட்டுமில்லாமல் பாடலாசிரியர், பின்னணி பாடகரும் ஆவார்.

-விளம்பரம்-

‘என்ன கொடுமை சார்’? என்ற டயலாக் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரேம்ஜி. ஆரம்பத்தில் இவர் சினிமாவில் திரைப்படங்களை இயக்கும் இயக்குனராக தான் சினிமா துறைக்குள் நுழைந்தார். அதன் பின் இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 600028 என்ற படத்தின் மூலம் தான் நடிகராக மக்கள் மத்தியில் பிரபலமானார்.

- Advertisement -

பிரேம்ஜி குறித்த தகவல்:

அதனைத் தொடர்ந்து இவர் மங்காத்தா, சேட்டை, கோவா போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். தற்போது இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பார்ட்டி மற்றும் ஜோம்பி ஆகிய படத்தில் பிரேம்ஜி இசையமைத்துள்ளார். இந்த பார்ட்டி படம் கூடிய விரைவில் வெளியாக உள்ளது.

முரட்டு சிங்கிள் பிரேம்ஜி :

இது ஒரு பக்கம் இருக்க, இவருக்கு திருமணம் குறித்து எப்போது? ஏன் நடக்கவில்லை? உண்மையாலே இவருக்கு திருமணம் ஆகுமா? என்று சோசியல் மீடியாவில் பல்வேறு கருத்துக்களும் கேள்விகளும் எழுந்து கொண்டே இருக்கும். அதோடு இவருடைய திருமணம் குறித்து பிரபலங்கள் முதல் ரசிகர்கள் என பலரும் கேள்வி எழுப்பி இருந்தார்கள். காரணம், இவருக்கு 45 வயது ஆகியும் திருமணம் ஆகவில்லை.

-விளம்பரம்-

பிரேம்ஜி திருமணம் குறித்த அப்டேட்:

இந்த நிலையில் பிரேம்ஜிக்கு திருமணமாக இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் இந்து என்ற பெண்ணை தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறார். இவர் சேலத்தை சேர்ந்தவர். இவர்களுடைய திருமணம் ஜூன் 9-ஆம் தேதி நடைபெறுகிறது. மேலும், இவர்களுடைய திருமணம் திருத்தணியில் உள்ள முருகன் கோவில் தான் நடைபெற இருக்கிறது.

ரசிகர்கள் வாழ்த்து:

இந்த திருமணத்திற்கு முக்கிய பிரபலங்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்ள இருக்கிறார்கள். பல ஆண்டு காலமாக பேச்சுலர் ஆக இருந்த பிரேம்ஜி கூடிய விரைவில் திருமண வாழ்க்கைக்குள் செல்ல இருப்பதால் பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். தற்போது பிரேம்ஜியின் திருமணத்திற்கான ஏற்பாடுகள் தான் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

Advertisement