தற்போது உள்ள நவீன உலகத்தில் அனைவரது கையிலுமே ஸ்மார்ட் போன் உள்ளது. மேலும்,ஸ்மார்ட் போன் உள்ள அனைவரின் போனிலும் வாட்ஸ்அப் என்ற செயலி கண்டிப்பாக இல்லாமல் இருக்காது. இது வந்த பிறகு பலரும் மெசேஜ் என்ற ஒன்றை பயன்படுத்துவதையே நிறுத்திவிட்டனர்.

அதே போல வாட்ஸ்அப் நிறுவனமும் தங்களது வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ள பல்வேறு சிறப்பம்சங்களை கொடுத்து வருகின்றனர். பெரும்பாலானோர் வாட்ஸ்அப்பில் டைப் செய்து தான் மெசேஜ்களை அனுபவார்கள். ஒரு சிலரோ வாய்ஸ் மெசேஜ் மூலம் தங்களது குரலை பதிவு செய்து அனுபாவர்கள்.

இதையும் படியுங்க : அடிக்கடி உங்கள் பைக் சாவி,பர்ஸ்களை தொலைக்கரவங்களா நீங்க.!அப்போ இத மட்டும் வாங்கிடுங்க.! 

Advertisement

ஆனால், இவை இரண்டும் இல்லாமல் வேறு வழியில் இதை விட சுலபமாக நீங்கள் மெசேஜ்களை அனுப்ப முடியும். இதற்காக நீங்கள் கூகுல் ஸ்டோரில் கூகுள் கீ-போர்ட் ஆப்பை பதிவிறக்கம் செய்ய வேண்டும். இதுவரை வாட்ஸ்ஆப்பில் ஜிபோர்டு வசதி அறிமுகம் செய்யப்படவில்லை என்றாலும், தற்சமயம் ஜிபோர்டு வசதி வாட்ஸ்ஆப் செயிலியில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த ஆப் மூலம் வாட்ஸ்அப்பில் நீங்கள் டைப் செய்யும்போது வழக்கமான வாட்ஸ்ஆப் மைக் அருகே ஜிபோர்டின் மைகக் குறியீடு காணப்படும், அதை அழுத்திவிட்டு பேசினால், அது நமது பேச்சை எழுத்துகளாக டைப் செய்துவிடும். மிகவும் சுலபாக இருக்கிறது அல்லவா.

Advertisement
Advertisement