ஸ்டாலின் 11 மணிக்கு பதவியேத்தா 11.05 ஆத்துல மாட்டி வண்டி ஓட்டினு போங்க, தடுக்கற அதிகாரி இருக்க மாட்டான் – தி மு க வேட்பாளர் பேச்சால் சர்ச்சை.

0
1044
stalin
- Advertisement -

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. தமிழ்நாட்டின் இரண்டு முக்கிய தலைவர்கள் ஜெ. ஜெயலலிதா, மு. கருணாநிதி ஆகியோரின் இறப்பிற்குப் பின்னர் தமிழ்நாட்டில் நடைபெறும் முதலாவது சட்டமன்றத் தேர்தல் இதுவாகும். அதே போல மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் கட்சி என்று பல்வேறு புதிய கட்சிகளும் தேர்தலில் களம் கான இருக்கின்றனர். தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 12ஆம் தொடங்கிய நிலையில் பல்வேறு முக்கிய கட்சிகளின் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

-விளம்பரம்-
AMMK leader Senthil Balaji joins DMK - The Hindu BusinessLine

தமிழகத்தின் தற்போதைய முதல்வரும் அதிமுக கட்சியின் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், திமுகவின் கட்சி தலைவர் எம் கே ஸ்டாலின், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன், ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் போன்ற பல்வேறு நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் இவர்கள் அனைவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

- Advertisement -

அதேபோல அதிமுக, திமுக, பா ஜ க என்று பல்வேறு கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் வேட்பாளர்கள், தங்கள் தொகுதி மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் திமுக ஆட்சிக்கு வந்தால் ஆற்றில் மாட்டு வண்டிகளை தாராளாக ஒட்டி செல்லலாம் என்று தி மு க வேட்பாளர் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பாக கரூர் தொகுதியில் செந்தில்பாலாஜி வேட்பாளராக போட்டியிடுகிறார் சமீபத்தில் இவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது திமுக என்று ஸ்டாலின் அவர்கள் 11 மணிக்கு பதவி ஏற்றால் 11 5க்கு மாட்டு வண்டியை நீங்களே ஆத்துக்கு ஓட்டுங்கள் எந்த அதிகாரியும் தடுக்க மாட்டான் தடுத்தால் எனக்கு ஃபோன் பண்ணுங்கள் அந்த அதிகாரி எங்கு இருக்கமாட்டான் என்று கூறியிருக்கிறார்.

-விளம்பரம்-

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. தேர்தலில் எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்று பல்வேறு வேட்பாளர்களும் வாக்குறுதிகளை அள்ளி வீசி வரும் நிலையில் திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர் இப்படி மணல் கொள்ளை குறித்து பகிரங்கமாக பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement