நீங்க Adjust பண்ணலான பரவயில்ல, உங்க அம்மா Ok தான்னு சொன்னாங்க – விஜய் டிவி சீரியல் நடிகையின் ஷாக்கிங் வீடியோ. (அதுவும் எந்த வயதில் பாருங்க)

0
756
Sreenidhi
- Advertisement -

சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஸ்ரீநிதி. இவர் தன்னுடைய பள்ளிப் படிப்பினை முடித்ததும் மலையாள சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு என்று கொடுத்திருந்தார். முதல் சீரியலிலேயே இவர் பலரின் கவனத்தை ஈர்த்திருந்தார். அடுத்து அடுத்து இவர் பல சீரியலில் நடித்து இருந்தார். மேலும், இவர் ஆதித்யா சேனலில் ஒரு தொடரில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகியிருந்தார். அடுத்ததாக இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி இருந்த தறி என்ற தொடரில் முக்கிய வேடத்தில் ஸ்ரீநிதி நடித்திருந்தார். அதற்குப் பிறகு படங்கள், மியூசிக் வீடியோ என்று ஸ்ரீநிதி நடித்துக்கொண்டிருந்தார்.

-விளம்பரம்-

இதனை அடுத்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த செந்தூரப்பூவே என்ற தொடரின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தார். இந்த தொடரின் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருந்தது. சமீபத்தில் தான் இந்த தொடர் முடிவடைந்தது. மேலும், இவர் சீரியலில் மட்டுமில்லாமல் பல ரியால்டி நிகழ்ச்சியிலும் பங்கு பெற்று இருந்தார். தற்போது இவர் மலையாளத்தில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்த தொடர் தமிழ் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலின் ரீமேக்ஸ் கிடையாது.

இதையும் பாருங்க : ’80s நடிகர்கள் வைத்த ரீ யூனியன்’ – என்னை ஏன் அழைக்கவில்லை, நான் என்ன மோசமான நடிகரா. பிரபல நடிகர் வேதனை. (ராதிகா தான் காரணமா ? )

- Advertisement -

ஸ்ரீநிதியின் சின்னத்திரைப்பயணம்:

இது வேறு ஒரு புதிய கதை. டைட்டில் மட்டும் தான் அதில் இருந்து எடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் ஸ்ரீநிதி அவர்கள் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவரிடம் மீடியா பயணத்தில் அட்ஜஸ்ட்மெண்ட் பத்தி ஏதாவது சந்தித்து இருக்கிறீர்களா? என்று கேட்டார். அதற்கு ஸ்ரீநிதி கூறி இருப்பது, நிறைய சந்தித்து இருக்கிறேன். நான் பத்தாவது படிக்கும்போது எனக்கு மலையாளப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்து இருந்தது. அப்போது நான் என் அம்மா இருவரும் சென்று படத்திற்காக பேசப் போய் இருந்தோம்.

ஸ்ரீநிதி அளித்த பேட்டி:

அப்போது அவர் எங்களிடம் அட்ஜஸ்ட் பண்ணிவிங்களா? என்று கேட்டார்கள். எங்களுக்கு புரியவில்லை, அதனால் எங்களுக்கு எந்த பிரச்சினை இல்லை. டீ, காபி இருந்தாலும் பிரச்சினை இல்லை, ஒன்னும் பிரச்சனை இல்லை. நாங்கள் அட்ஜஸ்ட் குடும்பத்திலிருந்து தான் வந்தோம் என்று சொன்னோம். உடனே அவர்கள் அட்ஜஸ்ட் பண்ண சொல்லவில்லை, அட்ஜஸ்ட்மெண்ட் எல்லாத்துக்குமே பண்ணனும் என்று சொன்னார்கள். எங்கம்மாவுக்கு புரிய ஆரம்பித்தது. பின் நாங்கள் அந்த மாதிரி குடும்பத்தில் இருந்து வரவில்லை. நாங்கள் நல்ல குடும்பம் என்று எங்களுக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்.

-விளம்பரம்-

அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து ஸ்ரீநிதி சொன்னது:

உடனே அவர்கள் மகள் இல்லை என்றாலும் பரவாயில்லை அம்மா ஓகே தான் என்று சொன்னார்கள். எங்க அம்மா மனசு உடைந்து போய் விட்டார்கள். நாங்கள் கிளம்பி அந்த இடத்தை விட்டு வந்து விட்டோம். இந்த மாதிரி பல பிரச்சனைகளை சந்தித்து இருக்கிறேன். பலரும் ஏன் படங்களில் நடிக்கவில்லை? என்று கேட்கிறார்கள். நான் எல்லோரையும் குறை சொல்லவில்லை என்னிடம் கேட்டவர்களை வைத்து தான் நான் பேசுகிறேன். இதே மாதிரி பல பேர் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொல்லி இருக்கிறார்கள். அதனால்தான் படங்களில் என்னால் நடிக்க முடியாமல் போனது.

ஸ்ரீநிதி கேட்ட கேள்வி:

தற்போது அந்த மாதிரி நிறைய பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறேன். நான் அவர்களிடம் ஒன்னே ஒன்னு மட்டும் தான் கேட்கணும். இந்த மாதிரி கேட்பவர்கள் வீட்டிலும் அம்மா, அக்கா, தங்கை, மனைவி என்று எல்லோர் பெண்களும் இருப்பார்கள். நாம் ஒரு பெண்ணிடம் இந்த மாதிரி கேட்கும் போது அவர்கள் வீட்டில் உள்ள பெண்களிடமும் யாராவது இப்படிக் கேட்டால் அவர்களுடைய மன நிலைமை எப்படி இருக்கும் என்று புரிந்து கொள்ள மாட்டார்களா? இந்தமாதிரி கேட்பவர்கள் எப்படி அவர்கள் வீட்டில் இருக்கும் பெண்களை நன்றாக பார்த்துக் கொள்வார்கள்? என்று கூறி இருந்தார்.

Advertisement