விஜய் படத்தில் நடித்த அனுபவம் பற்றி சீரியல் நடிகர் அருண் ராஜன் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியல்களின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் அருண் ராஜன். இவர் தன்னுடைய கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு மீடியாவுக்குள் நுழைந்தார். இவர் 2010 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான இளவரசி என்ற தொடரின் மூலம் தான் சின்னத்திரையில் நடிகராக அருண் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து இவர் அழகி, வாணி ராணி, சந்திரலேகா, கல்யாண பரிசு, பிரியசகி, சந்திரகுமாரி, பூவே உனக்காக போன்ற பல தொடர்களில் நடித்து இருக்கிறார். இவர் தொலைக்காட்சி நடிகர் மட்டுமில்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரும் ஆவார். பல நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கி இருக்கிறார்.
தற்போது இவர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ஜனநாயகன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் வினோத் இயக்கியிருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தில் நடித்த அனுபவம் தொடர்பாக நடிகர் அருண் ராஜன் பேட்டி அளித்து இருக்கிறார்.
அருண் ராஜன் பேட்டி:
அதில் அவர், விஜய் சார் படத்தில் நடிக்க என்னை அழைத்திருந்தார்கள். வினோத் சார் ஆபீஸ்க்கு வர சொன்னார்கள். நான் பிராங்க் என்று தான் நினைத்தேன். ஆனால், நிஜமாகவே வினோத் சார்
அழைத்து என் கதாபாத்திரத்தை பற்றி சொன்னார். அப்போது அவர் நான் என்ன பண்ணனும்? எப்படி இருக்கணும்? என்னவெல்லாம் செய்யணும்? என்று சொல்லி இருந்தார். பின் அவர், உங்களுக்கு ஆடிஷன் தேவையில்லை என்றும் சொன்னார். அந்த நிமிஷத்தை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. நான் விஜய் சாரோட பெரிய ரசிகன். சினிமாவில் என்னுடைய முதல் படம் அவர் படத்தில் தான்.

விஜய் பட வாய்ப்பு:
அவரோட காம்பினேஷன் சீன் இருக்கு என்றவுடன் என்னால் நம்ம முடியவில்லை? என் மனைவிக்கு போன் போட்டு சொன்னேன். அந்த சந்தோஷத்தை விவரிக்க எனக்கு வார்த்தையே இல்லை. அதற்குப்பின் நான் ஒர்கவுட் செய்ய ஆரம்பித்து விட்டேன். பார்த்தாலே ஒரு லுக் இருக்கணும் என்று ஜிம் டயட் என்று
இருந்தேன். ஷூட்டிங் நாலு மாதம் போனேன். அதில் 15 நாள் விஜய் சார் காம்பினேஷன் சீன் இருந்தது. வாழ்க்கையில் சிலருக்கு சில முமண்ட்ஸ் ஒரு தடவை தான் நடக்கும். எனக்கு இந்த வாய்ப்பு இந்த படத்தில் நடித்த அனுபவம் அந்த மாதிரி தான். திரும்பவும் கிடைக்காது.

விஜய் பற்றி சொன்னது:
முதல் நாள் செட்டில் விஜய் சாரிடம் அவருடைய காஸ்டியூம் டிசைனர் தான் என்னை அறிமுகப்படுத்தினார். ஆல் தி பெஸ்ட் ப்ரோ என்று விஜய் சார் சொன்னார். அதை தொடர்ந்து சூட்டிங் ஸ்பாட்டில் அவர் நடிப்பதை நான் பார்த்துட்டே வந்தேன். எல்லாமே சிங்கிள் டேக் தான். சுலபமாக, ஸ்டைலிசாக பண்ணி கொண்டே போயிட்டு இருந்தார். ஒரு பெரிய ஆடியன்ஸ் மத்தியில் ஸ்டேஜில் அவர் பேசுற சீன். மனுஷன் அசால்டா பண்ணிவிட்டார். என்னுடைய சீன் வந்தப்ப நானுமே நிறைய டேக் வாங்காமல் ஒரே டேக்கில் நடித்தேன்.
நானே எதிர்பார்க்காத அந்த தருணத்தில், சூப்பரா பண்ணிங்க ப்ரோ, உங்களுக்கு நல்ல ஃபியூச்சர் இருக்கு என்று விஜய் சார் சொல்லி எல்லாரும் முன்னாடியும் பாராட்டினார்.

படம் பற்றி சொன்னது:
அதை என்னால் மறக்கவே முடியாது. பின் நான் அவரிடம், சார் என் அசிஸ்டன்ட் தம்பி பக்கத்தில் இருக்கான். அவன் மட்டும் இங்கு இல்லாட்டி நான் யார்கிட்ட இதை சொன்னாலும் நம்ப மாட்டார்கள். நான் இன்னைக்கு தூங்க மாட்டேன் சார் என்று சொன்னேன். சந்தோஷத்தில் என்ன பேசுவது என்று எனக்கு புரியவில்லை. எல்லா விஜய் ரசிகர்களையும் போல நானும் படம் ரீலிசுக்கு காத்துக் கொண்டிருக்கிறேன். இந்த கதாபாத்திரத்தை வேறு யாருக்கும் வேணும் ஆனாலும் கொடுத்து இருக்கலாம். ஆனால், என்னை தேடி தந்த இயக்குனர் வினோத் சாருக்கும் படத்தின் தயாரிப்பாளருக்கும் இந்த நேரத்தில் நன்றியை சொல்லிக் கொள்ளணும் என்று நெகழ்ச்சியில் கூறி இருக்கிறார்






