தாய் வீடு என்று நம்பி சென்றால் அசிங்கப்படுத்திய சன் டிவி – மீண்டும் விஜய் டிவிக்கே திரும்பும் அசீம்.

0
570
azeem
- Advertisement -

சமீபகாலமாக சின்னத்திரை சீரியல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. சீரியல்கள் மட்டுமில்லாமல் அதில் நடிக்கும் நடிகர்களும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வருகிறார்கள். அந்த வகையில் சின்னத் திரையின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் நடிகர் அசிம். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பகல் நிலவு” என்ற சீரியல் மூலம் தான் பிரபலமானார். இந்த சீரியல் 2016 ஆம் ஆண்டு ஒளிபரப்பாகி 2019 ஆம் ஆண்டு முடிவடைந்தது. அதோடு இது ஆண்டாள் அழகர் என்ற தொடரின் இரண்டாம் பாகம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த சீரியலில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முகமது அசிம் நடித்து இருந்தார். நடிகை சிவானி இவருக்கு ஜோடியாக நடித்து இருந்தார்.

-விளம்பரம்-
Vijay Tv Serial Actor Azeem Divorced His Wife Check His Wife Photo

இவர்கள் இருவருக்காகவே இந்த சீரியலை பார்க்க ஒரு ரசிகர் பட்டாளம் இருந்தது. அந்த அளவிற்கு இவர்களுடைய ரொமான்ஸ் இருக்கும். இந்த சீரியல் முடிவடையும் போது பலரும் வருத்தப்பட்டார்கள் என்று சொல்லலாம். மேலும், அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடித்த முகமது அசிம் அவர்கள் சென்னையை சேர்ந்தவர். இவர் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் விஷுவல் கம்யூனிகேஷன் படித்து முடித்து மீடியாவுக்குள் நுழைந்தார். இவர் முதன் முதலாக 2008 ஆம் ஆண்டு ஜீ தமில் வி.ஜே.வாக தான் சின்னத்திரை உலகில் அறிமுகமானார்.

இதையும் பாருங்க : ‘தப்பு எந்த குடும்பத்துல நடக்கல, என்னால ரஜினி அங்கள் கூட அப்பா கூட பேசறது இல்ல’ – கண் கலங்கிய வனிதா. வீடியோ இதோ.

- Advertisement -

நடிகர் அசிமின் சின்னத்திரை பயணம்:

பின் பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் போன்ற சீரியல்களில் நடித்து உள்ளார். மேலும், இவர் நடிப்பு மட்டும் இல்லாமல் நடனம், பாட்டு, காமெடி, தொகுப்பாளர் என பல திறமைகளைக் கொண்டவர். இவர் சில நிகழ்ச்சிகளை கூட தொகுத்து வழங்கி உள்ளார். தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் பூவே உனக்காக என்ற சீரியலில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த சீரியலில் இவர் நடிக்க ஆரம்பத்திலிருந்தே டாப் கியரில் சென்று கொண்டிருக்கின்றது. அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போது டிஆர்பியில் இந்த சீரியல் தான் முந்தி இருந்தது.

Serial Actor Azeem Debue As Hero | ஹீரோவாக அசீம்

சன் குடும்ப விருதுகள் நிகழ்ச்சி:

இந்த நிலையில் சன் டீவியில் நடிகர் அசிம் மனம் உடைந்து இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தற்போது சன் டிவியில் சன் குடும்ப விருதுகள் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சி மார்ச் 30ஆம் தேதி சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடக்க இருக்கிறது. மேலும், இந்த நிகழ்ச்சி தமிழ் புத்தாண்டையொட்டி டிவியில் ஒளிபரப்பாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த விருதுகளுக்கான ஹீரோ பிரிவு நாமினேஷன் பட்டியலில் கூட பூவே உனக்காக சீரியல் ஹீரோ அசின் பெயர் வரவில்லை. தற்போது இந்த தகவல் அஸிம்க்கு மட்டும் இல்லாமல் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

-விளம்பரம்-

ஹீரோ பிரிவு நாமினேஷன் பட்டியல்:

மேலும், ஹீரோ பிரிவு நாமினேஷன் பட்டியலில் அன்பே வா -வருண், சித்தி 2 -கவின், கண்ணான கண்ணே – யுவா, கயல் – எழில், ரோஜா- அர்ஜுன், தாலாட்டு – விஜய் என மொத்தம் ஆறு பேர் கொண்ட நாமினேஷன் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பூவே உனக்காக சீரியல் ஹீரோ நசீம் பெயர் வரவில்லை. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே விஜய் டிவியில் சிறந்த நடிகருக்கான விருதை இரண்டு வருடம் தொடர்ந்து அசிம் வாங்கி இருந்தார். ஆனால், சன் டிவியில் பூவே உனக்காக தொடருக்கு நல்ல ரேட்டிங் கிடைத்தும் அவருக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. பிக் பாஸ் 5 நிகழ்ச்சி தொடங்கியபோதே மறுபடியும் விஜய் டிவி அசிமை அழைத்தது. ஆனாலும், அவர் போகவில்லை. பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு கூப்பிட்டும் அவர் மறுத்துவிட்டார்.

விஜய் டிவிக்கு போகும் அசிம்:

இன்னும் சொல்லப்போனால் கயல் கதை ஹீரோவுக்கு முக்கியத்துவம் தர கதையே இல்லை. ஆனால், ஹீரோ நாமிநேஷன் லிஸ்டில் கயல் ஹீரோ இருக்கிறது. பூவே உனக்காக ஹீரோ அசிம் பெயர் நாமினேஷனில் கூட இல்லாதது அவரை ரொம்ப அதிர்ச்சியில் தள்ளி இருக்கிறது என்று கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இதைவிட பெரிய அதிர்ச்சி என்னவென்றால் பூவே உனக்காக தொடர் சிறந்த வில்லி என்ற ஒரே ஒரு பிரிவில் மட்டும் தான் நாமினேஷன் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது. இதனால் அசிம் மனம் நொந்து போயிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவர் மீண்டும் விஜய் டிவிக்கு போவார் என்றும் அவருடைய நெருங்கிய நண்பர் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Advertisement