மர்மதேசம் முதல் மாஸ்டர் வரை – சீரியல் பயணம் குறித்து பேசிய நடிகர் சேட்டன்.

0
9783
chetan

மெட்டி ஒலி சீரியல் மூலம் மக்கள் மனதில் பிரபலமானவர் நடிகர் சேத்தன். இவர் தற்போது சீரியலை விட்டு விலகி படங்கள், வெப்சீரிஸ், திரைப்பட இயக்கம் என்று பிசியாக இருந்து வருகின்றார். தென்னிந்திய சினிமா உலகில் படங்களில் குணசித்திர வேடங்களில் நடிக்கும் நடிகை தேவதர்ஷினி அவர்களின் கணவர் என்பது குறிபிடத்தக்கது. தற்போது மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார். இவரிடம் சமீபத்தில் பேட்டி எடுக்கப்பட்டது. அதில் இவர் தன்னுடைய சீரியல் அனுபவம் குறித்து கூறியது, எனக்கு நடிப்பு என்றால் ரொம்ப பிடிக்கும். அதனால் தான் இந்தத் துறைக்குள் வந்தேன். மர்மதேசம், மெட்டி ஒலி என்று நான் அடுத்தடுத்து நடித்த சீரியல் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

சேத்தன்

- Advertisement -

சின்னத்திரையில் எனக்கு ஒரு இடமும் கிடைத்தது. ஒரு கட்டத்தில் சீரியலில் ஒரே மாதிரி காட்சி, கான்செப்ட் எல்லாம் கொண்டு வருவது எனக்கு கொஞ்சம் போர் அடிக்கிற மாதிரி இருந்தது. அதனால் தான் நான் வெளியே வந்து விட்டேன். பின் படங்களில் நடிப்பதிலும், இயக்கத்திலும் கவனம் செலுத்தினேன். மீண்டும் சீரியலில் நான் வருவது கொஞ்சம் கஷ்டம் தான். நான் இனி சீரியலில் நடிக்க விரும்பவில்லை.

இதையும் பாருங்க : என்னது,விஜய்யும் மீரா மிதுனை காபி அடிச்சிட்டாரா. மீரா போட்ட பதிவை பாருங்க.

-விளம்பரம்-

நான் சீரியலில் நடிப்பதை விட்டு கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் ஆகிவிட்டது. இருந்தாலும் எனக்கு சீரியல் வாய்ப்பு வந்து கொண்டு தான் இருக்கின்றது. மேலும், மர்மதேசம், மெட்டி ஒலி சீரியல்கள் சீசன் 2 எடுத்தால் நீங்க நடிப்பீர்களா என்று கூட என்னிடம் நிறைய பேர் கேட்டார்கள். மர்ம தேசம் சீரியல் வந்த சமயத்தில் வழக்கமான சீரியல்களை விட இந்த சீரியல் கொஞ்சம் வித்தியாசமான கதைக்களம் கொண்டு இருந்தது.

வாத்தி கம்மிங் பாடலில் சேட்டன்

அதனால அந்த சீரியல் மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. ஆனால், அதற்கு பிறகு வந்த சீரியல்கள் எல்லாம் ஒரே கான்செப்டை தான் வைத்து போய்க்கொண்டிருக்கிறது. இதனால் எனக்கு பெரிய சலிப்பாக இருந்தது. அதனால் இனி சீரியலில் நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்து விட்டேன். நான் சீரியல் விட்டு வெளியே வந்த சமயத்தில் படவாய்ப்புகளும் எனக்கு பெரிதாக அமையவில்லை.

திரும்பவும் முதலில் இருந்து ஆரம்பிக்க மாதிரி இருந்தது. அதற்கு பிறகு வெள்ளித்திரையில் படங்களில் நடித்தும், படங்களை இயக்கியும் என என் வாழ்க்கையை தொடங்கினேன். இப்போது நான் தளபதி விஜய் நடித்து முடித்து உள்ள மாஸ்டர் படத்தில் நடித்திருக்கிறேன். கைதி படம் மூலமாகத் தான் லோகேஷ் கனகராஜ் எனக்கு அறிமுகமானார்.

Image result for tamil actor chetan  serials

பின் மாஸ்டர் படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. மாஸ்டர் படத்தில் எனக்கு விஜய் சாரோட காம்பினேஷன் சீன் எல்லாம் இருக்கு. என்னுடைய போர்ஷன் எல்லாம் பெரும்பாலும் டெல்லியில் தான் எடுக்கப்பட்டது. இந்த படத்தில் விஜய் சாருடன் சேர்ந்து நடித்து இருப்பது எனக்கு மிகவும் பெருமையாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது என்று கூறினார்.

Advertisement