நடிகர் சூர்யாவை நாரடிப்போம் என்று பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சூர்யா திகழ்ந்து கொண்டிருக்கின்றார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியாகி இருந்த படம் கங்குவா.
இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மேலும், பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான கங்குவா படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. அதோடு கங்குவா படம் குறித்து சோசியல் அதோடு பயங்கரமான நெகட்டிவ் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. காரணமே இல்லாமல் சூர்யாவையும், படத்தையுமே மோசமாக விமர்சித்தும் திட்டி இருக்கிறார்கள்.
கங்குவா படம் குறித்த விமர்சனம்:
குறிப்பாக, கங்குவா படத்தின் நெகட்டிவ் விமர்சனத்தை விட சூர்யாவை தனிப்பட்ட முறையில் திட்டியவர்கள் தான் அதிகம். இப்படி இருக்கும் நிலையில் சீரியல் நடிகர் ஒருவர் தனிப்பட்ட முறையில் சூர்யாவை மோசமாக தாக்கி பேசி இருக்கும் தகவல் தான் தற்போது வைரலாக்கப்பட்டு வருகிறது. அவர் வேறு யாரும் இல்லை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ரவிச்சந்திரன். சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டவர் ரவிச்சந்திரன்.
நடிகர் ரவிச்சந்திரன் பேட்டி:
அதிலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனாவின் தந்தையாக நடித்திருந்தவர். தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் இதயம் தொடரில் நடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகர் ரவிச்சந்திரன், தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவர் சூர்யா. இங்கு தரமான கல்வி கிடைக்காது என்று சொல்லிவிட்டு தன்னுடைய பிள்ளைகளுக்காக மும்பைக்கு போனதாக சொல்கிறார்கள். உங்க பிள்ளைகள் மட்டும் தரமான பள்ளிக்கூடத்தில் படிக்கணும்.
சூர்யா குறித்து சொன்னது:
அதே இங்கு இருக்கிற மாணவர்கள் எக்ஸ்ட்ரா ஒரு மொழியை கத்துக்கிட்டால் உன் புருஷனுக்கு பொத்துகிட்டு கோபம் வருகிறது. நாங்களும் பண்ணுவோம், நாங்களும் செய்வோம், தொடர்ந்து செய்வோம். சூர்யா படத்தை தொடர்ந்து நாரடிப்போம். உங்களால் முடிந்தால் என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ? என்று ஆக்ரோஷமாக பேசி இருக்கிறார். இப்படி இவர் பேசியதற்கு காரணம் தமிழ்நாட்டில் இந்தி மொழி திணிப்பு குறித்து சூர்யா பேசியது தான் என்று கூறப்படுகிறது.
கங்குவா கதைக்களம்:
படத்தில் 1070 மற்றும் 2024 என்று வெவ்வேறு காலகட்டத்தில் கதை நகர்கிறது. இரண்டு காலகட்டத்தையுமே மாற்றி மாற்றி காட்டுகிறார்கள். தற்போது இருக்கும் காலகட்டத்தை சேர்ந்தவர் பிரான்சிஸ். இவருக்கு ஜூடா என்பவருடைய மூலம் தான் யார் என்பது தெரிய வருகிறது. அங்கிருந்து கங்குவா கதை தொடங்குகிறது. அதில் பெருமாச்சி தீவின் நாயகனாக வலம் வருபவர் கங்குவா. மேலும், கங்குவாவுக்கும் அவருடைய குழுவுக்கும் போர் செய்வது தான் குலத்தொழில். வீரமும் இயற்கை விளைந்த இந்த மண்ணை தன்னுடைய வசம் படுத்த ரோமானிய அரசு நினைக்கிறது. அதற்கு பிறகு என்ன ஆனது? உதிரா பெருமாச்சி மீது போர் தொடுக்க காரணம் என்ன? அப்பாவை கொன்ற கங்குவாவை கொள்ள துடிக்கும் கொடுவாவின் பகை என்ன? என்பது தான் படத்தின் மீதி கதை.