நம்ம கோபி அண்ணனா இது ? அவரின் முதல் சீரியலில் எப்படி இளமையா இருந்துள்ளார் பாருங்க. இதோ புகைப்படம்.

0
663
gopi
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும், கோபி ரோலில் பாக்கியா கணவராக சதீசும் நடித்து வருகிறார்கள். மேலும், இல்லத்தரசிகளின் பேவரட் சீரியலாக பாக்கியலட்சுமி திகழ்கின்றது. இந்த தொடரில் குடும்ப பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள், போராடுகிறார்கள் என்பதை மையப்படுத்தி உருவாகி உள்ள கதை. தற்போது இந்த சீரியலில் கோபி, ராதிகாவை இரண்டாம் திருமணம் செய்யப் போகிறார். எல்லோரும் பிக்கினிக்கு குடும்பத்துடன் செல்கிறார்கள்.

-விளம்பரம்-

ஆனால், கோபி அலுவலகத்தில் வேலை இருக்கிறது என்று ராதிகா உடன் சேர்ந்து ஊர் சுற்றுகிறார். இதை எழில் பார்க்கிறார். கோபியின் சுய ரூபத்தை எழில் கண்டு பிடிப்பாரா? கோபி ராதிகாவை திருமணம் செய்வாரா? இப்படி பல திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. மேலும், நாளுக்கு நாள் பாக்கியா உடைய கதாபாத்திரம் வீட்டில் உள்ள பெண்களுக்கு ஒரு உதாரணமாகவும், தைரியமாகவும் இருக்கிறது. பெண்கள் குடும்பத்தை பார்த்துக் கொண்டாலும் தனக்கு என்று ஒரு வேலை இருக்க வேண்டும், பெண்கள் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதை உணர்த்துகிறது.

இதையும் பாருங்க : ஆதியுடன் திருமணம் , நிச்சயதார்த்த புகைப்படங்களை பகிர்ந்த நிக்கி கல்ராணி – எப்போ நடந்துள்ளது பாருங்க.

- Advertisement -

பாக்யலக்ஷ்மி சீரியலில் நடிக்கும் சதீஸ்:

மேலும், இந்த தொடரில் கோபி கேரக்டரில் நடித்து ரசிர்களிடைய அதிகம் ரீச் ஆனவர் சதீஷ். குடும்ப இல்லத்தரசிகள் பலரும் கோபி மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள். ஏன்னா, பாக்கியாவை ஏமாற்றி கோபி, ராதிகாவுடன் கள்ளத்தொடர்பு வைத்து இருப்பதனால் மக்கள் கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள். சமீபத்தில் நடந்த பேட்டியில் கூட பலரும் கோபியை கண்டித்துப் பேசியிருந்தார்கள். அந்த அளவிற்கு இந்த தொடரின் மூலம் சதீஸ் மக்களின் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். இந்நிலையில் நடிகர் சதீஸ் குறித்து ஒரு ஸ்பெசலான தகவல் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.

சதீஸின் வெள்ளித்திரை பயணம்:

சதீஷை பாக்யலக்ஷ்மி சீரியல் மூலம் தான் பலருக்கும் தெரியும். ஆனால், இதற்கு முன் சதீஸ் பல தொடர்களில் நடித்து இருக்கிறார். இவர் சென்னையை சேர்ந்தவர். இவர் 90’s ல் சினிமாவில் நடிக்க தொடங்கினார். இவர் மின்சாரப்பூவே படத்தின் மூலம் தான் சினிமாவில் அறிமுகமானார் . அதனை தொடர்ந்து இவர் ஏராளமான படங்களில் நடித்தார். திரைத்துறையில் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது MGR படம் தான். இவர் எம்.ஜி.ஆர் ராக நடித்திருந்தார். இந்த படத்தை பாலகிருஷ்ணன் இயக்கி இருந்தார். இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

-விளம்பரம்-

நடிகர் சதீஷின் சின்னத்திரை பயணம்:

சிறந்த குணச்சித்திர நடிகராக சதீஸ் பல திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். அதன்பிறகு 2000 ஆம் ஆண்டு சின்னத்திரையில் அறிமுகமானார். இவர் முதன் முதலில் சன்டிவியில் ஒளிபரப்பான மந்திர வாசல் சீரியல் மூலம் தான் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு சூலம், கல்யாண பரிசு 2, ஆனந்தம், திருமதி செல்வம், வம்சம், அன்னக்கொடியும் ஐந்து பெண்களும், குலதெய்வம், பொன்னூஞ்சல் போன்ற பல நாடகங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். அதுமட்டும் இல்லாமல் இவர் மாடலிங் செய்தும், பல விளம்பரங்களில் நடித்தும் உள்ளார்.

வைரலாகும் சதீஷின் புகைப்படம்:

தற்போது சதீஸ் சீரியல்களில் நடித்து வந்தாலும் வெள்ளித்திரையிலும் அவ்வபோது படங்களில் நடித்து வருகிறார். தனி ஒருவன், இருமுகன் போன்ற படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார். இருந்தாலும் இவருக்கு மிகப் பெரிய பிரபலத்தை உருவாக்கியது பாக்கியலட்சுமி சீரியல் தான். இந்நிலையில் சதீஸ் முதன் முதலாக நடித்த மந்திர வாசல் தொடரின் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் பார்ப்பதற்கு சதீஸ் செம மாஸ் ஹீரோ போல் இருக்கிறார். இந்த புகைப்படத்தை நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.

Advertisement