பிரபல சீரியல் நடிகர் ஷியாம் கனேஷின் மனைவி இந்த தெய்வமகள் சீரியல் நடிகை தானா – அவரது மகன் கூட ஜோதிகாவின் இந்த படத்தில் நடித்தவர் தான்.

0
1488
shyam
- Advertisement -

90 காலகட்டங்களில் இருந்து இன்று வரை மக்கள் மத்தியில் திரைப்படங்கள் மட்டும் இல்லாமல் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்தவர்களும் பிரபலமாக இருக்கிறார்கள். பொதுவாகவே பிரபலங்கள் சினிமாவை விட்டு விலகினாலும் சின்னத்திரை சீரியல்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக தான் இருக்கிறார்கள். அந்த வகையில் சின்னத்திரை மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் ஷ்யாம் கணேஷ். இவரைப் பற்றி தெரிய பல விஷயங்களை தான் பார்க்க போகிறோம்.

-விளம்பரம்-

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக இருந்தவர் ஷியாம் கணேஷ். இவர் 1995 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சக்தி என்ற நாடகத்தின் மூலம் தான் மீடியாவிற்கு அறிமுகமானார். அதன் பின்னர் பொதிகை டிவி, ராஜ் டிவி என பல்வேறு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாடகங்களில் நடித்தும் மக்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் ஆரம்பத்தில் சின்னத்திரையில் தான் நடித்தார். அந்தப் பிரபலத்தின் மூலம் தான் இவருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்தது.

- Advertisement -

நடிகர் ஷியாம் கணேஷின் திரைப்பயணம்:

தல அஜித்தின் நடிப்பில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தீனா என்ற படத்தின் மூலம் தான் இவர் வெள்ளித்திரையில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் ஆனந்தம், யூத், மனசெல்லாம், மனதோடு மழை க்காலம், மிடில் கிளாஸ் மாதவன், திருமலை , ஒரு நாள் ஒரு கனவு போன்ற பல படங்களின் நடித்து இருக்கிறார். மேலும், இவர் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார். பிறகு இவர் சின்னத்திரை, வெள்ளித்திரையில் நடித்து பிரபலமான நடிகையான சிந்து என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

Shyam Ganesh Biography, Wiki, DOB, Family, Profile, Movies list

நடிகர் ஷியாம் கணேஷின் மனைவி:

நடிகை சிந்து வேற யாரும் இல்லைங்க, சின்னத்திரையில் பிரபலமான நடிகை தான். தற்போது இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி சமீபத்தில் நிறைவடைந்த இதயத்தை திருடாதே 2 என்ற சீரியலில் ராஜேஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக மிரட்டிய சிந்து தான். இந்நிலையில் இவர்களுடைய மகனின் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அவர் வேற யாரும் இல்லைங்க, ஜோதிகாவின் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த காற்றின் மொழி படத்தில் ஜோதிகாவின் மகனாக நடித்தவர் தான்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is SHYAM-2.jpg

நடிகர் ஷியாம் கணேஷின் மகன்:

இந்த படம் 2018 ஆம் ஆண்டு ராதாமோகன் இயக்கத்தில் வெளிவந்தது. குடும்ப பெண்களாலும் சாதிக்க முடியும் என்பதை சொல்லும் கதையாக இந்த படம் அமைந்தது. இந்த படத்தில் சிந்து சியாம் அவர்கள் பிரீத்தி வானொலி வரவேற்பாளர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து ஷியாம் கணேஷ் மகன் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார்.

This image has an empty alt attribute; its file name is syam1111-1-1024x768.jpg

நடிகர் ஷியாம் கணேஷின் குடும்ப புகைப்படம்:

இவர் படங்களில் மட்டும் இல்லாமல் பகல் நிலவு, தெய்வமகள் போன்ற சின்னத்திரை சீரியல்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் நடிகர் ஷியாம் கணேஷ் அவர்கள் தனது மனைவி மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்து பலரும் இவருடைய மகனா! அழகான கியூட் பேமிலி என்று கமெண்டுகளை போட்டும் வருகிறார்கள்.

Advertisement