தன்னுடைய திருமணம் தொடர்பான சர்ச்சைகளுக்கு பாக்கியலட்சுமி சீரியல் நடிகை திவ்யா கணேஷ் கொடுத்திருக்கும் விளக்கம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் திவ்யா கணேஷ். இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கேளடி கண்மணி’ தொடர் மூலம் தான் மக்கள் மத்தியில் அறிமுகமானார்.

அதற்கு பின் இவர் லட்சுமி வந்தாச்சு, சுமங்கலி, செல்லம்மா, மகாநதி போன்ற பல தொடர்களில் நடித்து இருந்தார். இருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பிரபலம் ஆக்கியது பாக்கியலட்சுமி சீரியல் தான். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் டிஆர்பி ரேட்டிங்கில் டாப்பில் இருப்பது பாக்கியலட்சுமி சீரியல். இந்த தொடர் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ரா நடிக்கிறார்.
பாக்கியலக்ஷ்மி :
இந்த தொடர், பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள், போராடுகிறார்கள் என்பதை மையப்படுத்திய கதை. மேலும், இந்த தொடரில் ஜெனிபர் என்ற கதாபாத்திரத்தில் திவ்யா கணேஷ் நடித்து வருகிறார். இவருக்கு கணவனாக செழியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் விகாஸ் சம்பத். இவர்களுடைய ஜோடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் இவர்கள் இருவருமே நிஜ வாழ்க்கையிலும் ஜோடி சேர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

திவ்யா கணேஷ் பேட்டி:
இதற்கு பலரும் பலவிதமாக கமெண்ட் போட்டு வருகிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் திவ்யா கணேஷ், சீரியலில் கணவன் மனைவியாக நடித்தால் ரசிகர்கள் அவர்களை நிஜ வாழ்க்கையிலும் ஜோடியாகவே நினைக்கிறார்கள். இதை கேட்கும் போது சிரிப்பாகத்தான் இருக்கிறது. அதனால் நான் அதை பெரிசாக எடுத்துக் கொள்ளவில்லை. சமூக ஊடகத்தில் ஒரு விஷயத்தை நாலு பேருக்கு சொல்லும்போது அது உண்மையா ? இல்லையா? என்று பல தடவை யோசித்து ஆராய்ந்து தான் சொல்ல வேண்டும். காரணம், இன்னைக்கு சோசியல் மீடியாவை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு வளர்ந்திருக்கிறது.

சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி:
உண்மையை விட பொய்தான் வேகமாக சென்று கொண்டிருக்கின்றது. நானும் விகாசும் காதலிக்கிறோம், சீக்கிரமாகவே கல்யாணம் செய்து கொள்கிறோம் என்று சில தினங்களாகவே சோசியல் மீடியாவில் செய்தி பரவிக் கொண்டிருக்கின்றது. அதை சிலர் எனக்கு அனுப்பி வைத்திருந்தார்கள். இதை யார் பாக்க போறாங்கன்னு பெருசா எடுத்துக்காமல் விட்டுட்டேன். ஆனால் அந்த ஒரு நியூஸ் தான் தற்போது வைரல் ஆக்கி இருக்கிறார்கள். அந்த மனுஷனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி குழந்தை எல்லாம் இருக்கு. இதனால் எங்க ரெண்டு பேருடைய வீட்டிலேயும் தேவையில்லாமல் டென்ஷன் தான்.
https://www.youtube.com/watch?v=bTwFBDu_zUM
திவ்யா வைத்த கோரிக்கை:
சோசியல் மீடியாவில் நான் ஒன்னே ஒன்னு தான் கேட்டுக்கொள்கிறேன். செலிப்ரட்டிகள் பத்தி இந்த மாதிரி தகவல்களை கேள்விப்பட்டீர்கள் என்றால் தயவு செய்து தீர விசாரிக்காமல் ஷேர் பண்ணாதீர்கள். இதற்கு முன்னாடி என்னுடைய கல்யாணம் நின்றதற்கு ஆளாளுக்கு ஒரு கதையை அளந்து போட்டார்கள். இப்போ ஏற்கனவே திருமணம் ஆன ஒருத்தரை கல்யாணம் பண்ண போறேன்னு சொல்றாங்க. இதுதான் கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.






