பாக்கியலட்சுமி சீரியல் குறித்து நடிகை ராஜலக்ஷ்மி அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் டிஆர்பியில் முன்னிலை வகுக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் தொடங்கிய நாளிலிருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதனால் இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. மேலும், இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும், பாக்கியா கணவர் கோபி கதாபாத்திரத்தில் சதீசும் நடித்து வருகிறார்கள். சீரியலில் பாக்கியாவை அவர் கணவர் கோபி விவாகரத்து செய்து ராதிகாவை இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறார். விவாகரத்திற்கு பின் பாக்கியா கேன்டீன், சமையல், கல்லூரி என்று சுற்றிக் கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் கோபி திருந்தி வாழும் நினைக்கும்போது ராதிகா விவாகரத்து கொடுத்தார்.

கோபியும் ராதிகாவின் விருப்பத்திற்கு விவாகரத்து கொடுத்துவிட்டார். ராதிகா தன்னுடைய மகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். கோபி எங்கு போவது என்று தெரியாமல் பாக்கியா வீட்டிலேயே தங்கிவிட்டார். ஈஸ்வரி சொன்ன வார்த்தைக்காக பாக்யாவும் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். தற்போது பாக்கியா புது ரெஸ்டாரண்டை திறந்து இருக்கிறார். அதேபோல் செழியன் பிசினஸில் பிஸியாக இருக்கிறார். எழில் தன்னுடைய முதல் படத்தை எடுத்து வெற்றிகரமாக வெளியிட்டார். படமும் சூப்பர் ஹிட். தற்போது தன்னுடைய இரண்டாவது படத்திற்கான வேலையில் இருக்கிறார். எல்லோரும் அவரவர்கள் வேலையில் பிஸியாக இருக்கிறார்கள்.
பாக்கியலட்சுமி:
கோபி மட்டும் தனியாக இருப்பதை நினைத்து கவலைப்பட்ட ஈஸ்வரி, மீண்டும் கோபி- பாக்கியாவை திருமணம் செய்து வைப்பதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கிறார். இனி அடுத்து என்ன? என்ற விறுவிறுப்பில் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. அதோடு கடந்த சில கடந்த சில மாதங்களாகவே பாக்கியலட்சுமி சீரியல் முடிய இருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. ஆனால், இது தொடர்பாக சீரியல் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவுமே வெளியாகவில்லை.

ராஜலக்ஷ்மி பேட்டி:
இப்படி இருக்கும் நிலையில் இது தொடர்பாக ஈஸ்வரியாக நடிக்கும் ராஜலக்ஷ்மி சமீபத்தில் அளித்த பேட்டியில், இனியா நடனம் ஆடி இருந்தது சோசியல் மீடியாவில் பயங்கரமாக ட்ரோல் செய்து இருந்தார்கள்.
ஆனால், அதை பார்த்து நேகா ரொம்ப வருத்தப்பட்டாள். அவளை ட்ரோல் செய்தது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. அவள் அவருடைய கதாபாத்திரத்தில் தான் நடித்திருக்கிறார். நேகாவை விமர்சித்தது எங்கள் மொத்த செட்டில் இருந்த எல்லோருக்குமே வருத்தமாக இருந்தது.
இனியா ட்ரோல்:
இதைப் பற்றி கூட நேகா என்னிடம், ஆண்டி நான் என்ன செய்வேன்? எனக்கு கொடுத்ததை தான் நான் நடிப்பேன். அதற்காக ஏன் இப்படி எல்லாம் செய்கிறார்கள் என்றெல்லாம் ரொம்ப வருத்தப்பட்டு பேசி இருந்தார். அதற்கு நான், இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாதே, சீரியலில் என்னுடைய ஈஸ்வரி கதாபாத்திரத்தை கூட தான் நிறைய பேர் கிண்டல் செய்கிறார்கள். நான் என் மகனாக கோபிக்கு நிறைய சப்போர்ட் செய்கிறேன் என்று நிறைய பெண்மணிகள் திட்டி இருக்கிறார்கள். அதை நான் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. நீயும் அதை நினைத்து வருத்தப்படாதே என்று அவருக்கு அறிவுரை சொன்னேன்.

சீரியல் முடிவு பற்றி சொன்னது:
அதேபோல் சீரியல் முடிய போகுதா? என்று பலருமே கேட்கிறார்கள். எப்போது முடிக்க போகிறார்கள் என்று எங்களுக்கும் தெரியாது. இந்த சீரியலில் நாங்கள் கிட்டதட்ட ஐந்து வருடங்களாக நடித்துக் கொண்டிருக்கோம். எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு வேண்டும் இல்லையா? ஆனால், அது எப்போது நடக்கும் என்பது தான் தெரியவில்லை. இன்னும் சிலர், ஏன் பாக்கியலட்சுமி சீரியலை முடிக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். ஆனால், ஏன் முடிக்கிறார்கள் என்றெல்லாம் எங்களுக்கு தெரியாது என்று கூறி இருக்கிறார்கள்.






