பெண்களுக்கு இத சொல்லி கொடுங்க, சீரியல் விலகல் – எதிர்நீச்சல் சீரியல் நடிகை ஹரிப்பிரியா ஓபன் டாக்

0
111
- Advertisement -

தனது வாழ்க்கையில் அனுபவித்த கஷ்டங்கள் பற்றி நடிகை ஹரிப்ரியா அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக திகழ்பவர் நடிகை ஹரிப்ரியா. சொல்லப்போனால், இவரை ‘நந்தினி’ என்றால் தான் எல்லாருக்கும் தெரியும். அந்த அளவிற்கு எதிர்நீச்சல் சீரியல் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருக்கிறார் ஹரிப்ரியா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ என்ற சீரியல் மூலம் தான் சின்னத்திரையில் நுழைந்தவர்.

-விளம்பரம்-

இதைத்தொடர்ந்து இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான லக்ஷ்மி வந்தாச்சு என்ற தொடரில் நடித்தார். பின் சன் டிவியில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய வெற்றியடைந்த பிரியமானவள் என்ற தொடரில் இசை என்ற கதாபாத்திரத்தில் ஹரிப்ரியா நடித்திருந்தார். இந்த சீரியல் மூலம் தான் இவர் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார் என்று சொல்லலாம். அதேபோல் கடந்த 2022 ஆம் ஆண்டு இயக்குனர் திருச்செல்வம் இயக்கத்தில் தொடங்கப்பட்டு சின்னத்திரை டிஆர்பி யில் மாஸ் செய்த ஒரு தொடர் எதிர்நீச்சல்.

- Advertisement -

எதிர்நீச்சல் சீரியல்:

நான்கு பெண்களை மயமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த தொடரில் ஹரிப்ரியாவும் ஒருவராக நடித்திருந்தார். மேலும், வில்லனாக மறைந்த நடிகர் மாரிமுத்து நடித்திருந்தார். பின் அவர் மறைவிற்கு பிறகு வேல ராமமூர்த்தி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து முடியும் வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று இருந்தது.

எதிர்நீச்சல் 2 சீரியல்:

மேலும், இந்த சீரியல் அடக்கு முறைக்கு உட்படும் பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருந்தது. அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டம், பெண்களுக்கான உரிமையையும் மையமாக கொண்ட கதை தான் எதிர்நீச்சல். வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த இந்த சீரியல் அவசர அவசரமாக முடிக்கப்பட்டது. இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்தது. சமீபத்தில் தான் ‘எதிர்நீச்சல் 2’ தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-

விருது விழாவில் ஹரிப்பிரியா சொன்னது:

தற்போது இந்த இரண்டாவது சீசனுமே ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. மேலும், எதிர்நீச்சல் 2 சீரியலில் நந்தினி கதாபாத்திரத்தில் பட்டைய கிளப்பிக் கொண்டிருக்கிறார் ஹரிப்பிரியா. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் நடந்த விருது விழாவில் நடிகை ஹரிப்பிரியாவிற்கு விருது கொடுக்கப்பட்டது. அப்போது அவர், உன் கூடவே கடைசி வரைக்கும் வருவேன் என்று சொல்லி ஏமாற்றாதீர்கள். பெண்களுக்கு நீங்கள் தான் எப்போதும் தைரியம் என்று சொல்லி வளருங்கள். அடுத்தவர்களை சார்ந்து இருக்காமல் இருப்பதே ரொம்ப நல்லது.

சீரியல் பற்றி சொன்னது:

என்னுடைய வாழ்க்கையில் நான் நிறைய ஏமாற்றங்களை சந்தித்தேன். இருந்தாலுமே நான் ஓடிக்கொண்டு தான் இருக்கிறேன். அதற்கு காரணம் என் மகன்தான். என்னுடைய உடம்பில் தலையில் இருந்து உள்ளங்கால் வரை அனைத்து விதமான பிரச்சினைகள் இருக்கிறது. இருந்தாலும் நான் ஓடிக்கொண்டு தான் இருக்கிறேன். ஒரு சில நேரங்களில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து விலகி விடுகிறேன் என்றெல்லாம் கூட நிறைய முறை சொல்லி இருக்கிறேன். இப்போது நிகழ்ச்சியில் கூட இயக்குனரிடம் சொன்னேன். ஆனால், சிலருடைய அன்பு நம்மை மீண்டும் எழுந்து ஓட வைத்திருக்கிறது. அப்படிதான் நானும் ஓடிக்கொண்டிருக்கிறேன் என்று ரொம்ப எமோஷனலாக பேசி இருக்கிறார்.

Advertisement