திருமணம் செய்துகொள்ள கேட்ட நபர், மகனை வைத்து பதிலடி கொடுத்த மெட்டி ஒலி சீரியல் நடிகை.

0
1242
KrithikaAnnamalai
- Advertisement -

திருமணம் ஆகி ஒரு மகன் இருக்கும் நிலையில் தன்னை திருமணம் செய்துகொள்ள கேட்ட நபருக்கு சீரியல் நடிகை கிருத்திகா பதிலடி கொடுத்துள்ளார். சின்னத்திரை நடிகை கிருத்திகா, இவர் 2005 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான “மெட்டி ஒலி ” என்ற சீரியல் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் “கேளடி கண்மணி” , “வம்சம்” , “செல்லமே” போன்ற பல சின்னத்திரை தொடர்களில் வில்லியாக நடித்து அசத்தியுள்ளார்.சின்னத்திரை சீரியல்களை தவிர்த்து இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “மானாட மயிலாட” என்ற நடன நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.

-விளம்பரம்-

பார்ப்பதற்கு நல்ல உயரத்துடன், திடகாத்திரமாக இருப்பதால் இவருக்கு பெரும்பாலும் சீரியல்களில் வில்லி கதாபாத்திரமாகவே அமைகிறது. மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த “சின்னத்தம்பி” என்ற சீரியலில் நடித்துஇருக்கிறார் . அந்த தொடரிலும் வில்லலியாக நடித்து அசத்தி வந்த இவர் சில வருடங்களுக்கு முன்னர் அருண் சாய் என்ற நபரை திருமணம் செய்து கொண்டார்.

இதையும் பாருங்க : படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் சகோதரிகள் தான் – அஞ்சாதே படத்தில் வந்த இந்த ரெண்டு பொண்ணுங்க யார் தெரியுமா ?

- Advertisement -

திருமணத்திற்கு பிறகு இந்த தம்பதியருக்கு ஒரு மகனும் பிறந்தார். தற்போது இவர்களது மகனுக்கு 6 வயது ஆகிறது. இடையில் படு குண்டாக இருந்த இவர் பின் டயட் மற்றும் உடற் பயிற்சி மூலம் உடல் எடையை குறைத்து படு ஸ்லிம்மாக மாறி இருக்கிறார். ஸ்லிம்மாக மாறிய பின் அடிக்கடி பல புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

Tamil Serial News, Sun TV Pandavar Illam Krithika Annamalai - ஸ்பெஷல்  எபிசோடில் கிருத்திகாவின் சேலையை கவனிச்சீங்களா?

தற்போது இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டவர் இல்லம் தொடரில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ப்ரோபோஸ் செய்து ‘என்னை திருமணம் செய்துகொள்வீர்களா ப்ளீஸ்’ என்று கேட்டதற்கு, தன் மகனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு ‘இது என்னுடைய மகன், ப்ரோ’ என்று பதில் அளித்துள்ளார் கிருத்திகா.

-விளம்பரம்-
Advertisement