விஜய் டிவியில் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி சமீபத்தில் தான் கோலாகலமாக முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருந்தார்கள். இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வந்தார்.

இந்த நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்தில் இருந்து போட்டியாளர்கள் மத்தியில் சண்டை சச்சரவுகள் சென்று கொண்டு இருக்கிறது. மேலும், வைல்ட் கார்ட்டில் திவ்யா கணேஷ், பிரஜன் மற்றும் சான்ட்ரா, அமித் ஆகியோர் உள்ளே போனார்கள். சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் உடைய கிராண்ட் பினாலே சுற்று நடைபெற்றது. இதில் முதல் இடத்தை பிக் பாஸ் டைட்டில் பட்டத்தையும் திவ்யா கணேஷ் பெற்றிருக்கிறார்.
இதுவரை டைட்டில் பெற்றதை மூன்றாவது முறையாக பெண் போட்டியாளர் பெற்று இருக்கிறார். இரண்டாவது இடத்தை சபரி, மூன்றாவது இடத்தை விக்ரம், நான்காவது இடத்தை அரோரா பெற்றிருக்கிறார்கள்.
பிக் பாஸ் 9:
இந்நிலையில் பாக்கியலட்சுமி தொடரில் திவ்யா கணேஷுடன் சேர்ந்து நடித்த கம்பம் மீனா அளித்த பேட்டியில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக நெருங்கிய நட்பு வட்டத்துக்கு மட்டும் திவ்யா சொன்னார்கள். அப்பவே திவ்யா டைட்டில் வாங்க வாய்ப்பு இருக்கு என்று நாங்கள் நினைத்தோம். ஏன்னா, அவங்க கூட பழகுனதை வைத்து அப்படி சொன்னோம். அடிப்படையில் திவ்யா ரொம்பவே தைரியமான பொண்ணு. எந்த விஷயத்தையும் தெளிவாக அணுகுவார். அவருக்கு வயது குறைவே தவிர நல்ல மெச்சூரிட்டியான பொண்ணு.

திவ்யா வின்னர்:
எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் இந்த இன்ட்ரஸ்டிக்கு வந்து இப்ப வரைக்கும் நிலைத்து நிற்கிறார். அதிலிருந்து அவர்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளலாம். இதுவரை அவர்கள் வாழ்க்கையில் பல சவால்களை கடந்து வந்திருக்கிறார்கள். அவங்க இந்த மூன்று மாத ரியாலிட்டி ஷோ அவர்கள் வாழ்க்கையை மிரட்டுமா? நான் இதற்கு முன்னாடி பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ச்சியாக பார்த்தது கிடையாது. இந்த சீசனை திவ்யாவுக்காகவே எல்லா எபிசோடையும் பார்த்தேன். அந்த வீட்டுக்குள் அவங்க நடிக்கவில்லை.

கம்பம் மீனா பேட்டி:
அதனால் ஒரு கட்டத்தில் டைட்டில் வாங்கிடுவாங்க என்று நினைக்கத் தொடங்கி விட்டோம். நாங்கள் நினைத்தது அப்படியே நடந்து விட்டது. அதேபோல் இன்னொரு விஷயத்தையும் சொல்லணும். சில சீசன்கள் போட்டியாளராக சென்ற எத்தனையோ பேரை பயங்கரமாக டேமேஜ் பண்ணி அனுப்பி இருக்கிறார்கள். இந்த ஒரு விஷயம் தான் ஆரம்பத்தில் எனக்கு யோசனையாக இருந்தது. ஆனால், திவ்யாவுக்கு கடவுள் புண்ணியத்தில் அது நடக்கவில்லை. சந்தோஷமாக போய் சாதித்து விட்டு வந்திருக்கிறார். எங்கள் எல்லோருக்குமே ரொம்ப பெருமையாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.






