அரண்மனை கிளி சீரியலை விட்டு விலகும் நீலிமா. இது தான் காரணம்..

0
71778
neelima
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மக்கள் மத்தியில் பரிச்சயமான நடிகை நீலிமா ராணி. தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்ற நடிகைகளை விட வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு வந்த நடிகைகள் தான் அதிகம். அந்த வரிசையில் வந்தவர் தான் நடிகை நீலிமா. இவர் 1992 ஆம் ஆண்டு உலக நாயகன் கமல் நடித்த தேவர் மகன் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை நீலிமா ராணி. இதனை தொடர்ந்து அவர் விரும்புகிறேன், தம், மொழி, ராஜாதி ராஜா, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல போன்ற பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

அதன் பின்னர் பல்வேறு திரைப் படங்களில் துணை நடிகையாகவும் நடித்து உள்ளார். இவர் இதுவரை 30க்கும் மேற்பட்ட திரைப் படங்களில் நடித்து உள்ளார். சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைக்காததால் இவர் சின்னத்துறை நோக்கி பயணம் செய்தார். இவர் நடித்த முதல் சீரியல் 1998 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான இதி கதா காது என்ற சீரியல் தான்.

- Advertisement -

அதன் பின்னர் இவர் தமிழ்,தெலுங்கு, மலையாளம் என பல தொடர்களில் நடித்து உள்ளார். இவர் ஐம்பதிற்கும் மேற்பட்ட தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து உள்ளார். 20 ஆண்டுக்கு மேலாக தொடர்களில் நடித்து வருகிறார். இவர் தனது நடிப்பால் தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து உள்ளார். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி தற்போது சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறார் நீலிமாராணி.

தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் அரண்மனைக்கிளி சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் சீரியல் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் இவர் திடீரென்று இந்த சீரியலில் இருந்து விலகிவிட்டதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சமீப காலமாக விஜய் டிவியில் பல்வேறு சீரியல்கள் பல்வேறு கதைகளத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் மக்கள் மத்தியில் பிரபலமான சீரியலாக திகழ்ந்து கொண்டிருப்பது அரண்மனைக்கிளி.

-விளம்பரம்-

இந்த சீரியலில் மோனிஷா, சூரிய தர்ஷன், பிரகதி, மைனா நந்தினி, நீலிமாராணி உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். நீலிமாவின் கதாபாத்திரம் தான் இந்த சீரியலுக்கு பக்க பலம் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு இவருடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவர் திடீரென்று இந்த சீரியல் இருந்து விலகுவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கான காரணத்தை வெளியிடவில்லை.

இன்ஸ்டாகிராம் பதிவில் இவர் கூறியது, நான் கேமரா முன் நிற்கும்போது மிகவும் மகிழ்ச்சியான ஒருவராகவே உள்ளேன். குழந்தை நட்சத்திரம் முதல் தற்போது வரை நான் நடித்து வருகிறேன். பல மாற்றங்கள் என் வாழ்க்கையில் நிகழ்ந்த போதிலும் அதனை நான் ஆச்சரியத்துடன் ஏற்றுக் கொண்டிருக்கிறேன். ‘துர்கா நீ போய் வா’ எனக்கூறி நீங்கள் தான் என் பலம். எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள் என ரசிகர்களிடம் கூறியுள்ளார். நீலிமாவின் இந்த திடீர் விலகல் அவருடைய சின்னத்திரை ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Advertisement