தோல்வியை தாங்க முடியாமல் மேடையில் கதறி அழுத நீபா. சமாதானம் செய்த மகள். நெகிழிச்சியான வீடியோ இதோ.

0
44022
neepa

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு தனது நடனத்தால் அனைவரின் கவனத்தயும் ஈர்த்தவர் நீபா. விஜய் தொலைக்காட்சயில் ஒளிபரப்பான ‘கவியாஞ்சலி’ என்ற தொடர் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானார். பின்னர் பல்வேறு நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட நீபா, பல்வேறு சீரியல்களிலும் படங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக விஜய் நடிப்பில் வெளியான காவலன் படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக இவர் நடித்த கதாபாத்திரத்தின் மூலம் சினிமா ரசிகர்களால் மிகவும் அறியப்பட்டார். சன் டிவியில் ஒளிபரப்பான ‘மஸ்தானா மஸ்தானா’ மற்றும் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’ போன்ற நிகழ்ச்சிகளின் டைட்டில் வின்னராகவும் வந்தார்.

serial actress neepa daughter க்கான பட முடிவு

- Advertisement -

மேலும், தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவர் ரெண்டு படங்களில் டான்ஸ் மாஸ்டராவும் பணியாற்றி இருக்கிறார். காவலன் படத்தை தொடர்ந்து ‘பெருசு’, ‘பள்ளிக்கூடம்’, ‘தோட்டா’, ‘கண்ணும் கண்ணும்’, ‘அம்முவாகிய நான்’ உள்பட பல படங்களில் நடித்த நடிகை நீபா கடந்த 2013 ஆம் ஆண்டு தொழிலதிபர் சிவகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவருக்கு ஒரு அழகான பெண் குழந்தையும் பிறந்தது. குழந்தை பிறந்த பின்பும் ஒரு சில சீரியல்களில் தலை காண்பித்து வந்தார் நீபா.

இதையும் பாருங்க : பார்த்திபனின் சபாஷ் படத்தில் நடித்த நடிகையை ஞாபகம் இருக்கா? அவரின் தற்போதைய நிலை.

-விளம்பரம்-

சமீபத்தில் இவர், கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சூப்பர் மாம்’ என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தாய் மற்றும் மகள்கள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக இரண்டு சீசன்களை நிறைவு செய்துள்ளது. அந்த வகையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் மூன்றாவது சீசனில் நடிகை நீபாவும் கலந்து கொண்டார். ஆனால், சமீபத்தில் இவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இதனால் அவர் மேடையில் கண்ணீர் மல்க அழுது கொண்டு இருந்தார்.

https://www.youtube.com/watch?v=5NmEMfvRCX4

ஆனால், அவரது மகளோ தோல்வியை தாங்க முடியாமல் தனது தாய் அழுததை பார்த்து கலங்காமல் ‘பரவா இல்லை அம்மா, அடுத்த முறை பார்த்துக்கொள்ளலாம் ‘ என்று ஆறுதல் கூறினார். பொதுவாக இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் போட்டியாளர்களில் மகள்கள் தான் தோல்வியை தாங்க முடியாமல் அழுவார்கள், அவர்களை அவர்களது அம்மாக்கள் தான் ஆறுதல் படுத்துவார்கள். ஆனால், நீபா விஷயத்தில் அவரது மகள் சமாதான படுத்தியது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

Advertisement