ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் நடிப்பது குறித்த கேள்விக்கு கன்னட நடிகர் சிவராஜ்குமார் சொன்ன பதில்.

0
108
shivaraj
- Advertisement -

ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடிப்பது குறித்து கன்னட நடிகர் சிவராஜ்குமார் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. உலகம் முழுவதும் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். 80 காலகட்டம் தொடங்கி தற்போது வரை இவர் எண்ணற்ற படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றிருக்கிறது. இதனால் இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளார்கள்.

-விளம்பரம்-

சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் வசூலில் கோடிகளை குவித்து இருக்கிறது. குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும், உறவுகளின் பாசத்தையும் மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் அவர்கள் தலைவர் 169 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.

இதையும் பாருங்க : திருமணத்தால் நடிப்பை விட்டேன், மகன் இறப்பு – பிரகாஷ் ராஜ்ஜின் முன்னாள் மனைவி சந்தித்த கஷ்டங்கள் – அட, இந்த நடிகையின் தங்கையா இவர்.

- Advertisement -

தலைவர் 169 படம்:

மேலும், நெல்சன்- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்- அனிரூத் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு ‘தலைவர் 169’ என்று பெயர் வைக்கப்பட்டு இருந்தது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இதற்கான வீடியோ ஒன்றையும் அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தார்கள். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

படத்தின் பெயர் போஸ்டர்:

இவர்களுடன் பிரியங்கா மோகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கிளி அரவிந்த், இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் உட்பட நெல்சன் படங்களில் ஆஸ்தான நடிகர்கள் பலரும் இந்த படத்தில் நடிக்க இருக்கிறார்கள். மேலும், இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த படத்திற்கு ஜெயிலர் என பெயரிடப்பட்டுள்ளது. அதற்கான போஸ்டர் ஜெயிலர் வெளியாகி இருக்கிறது. இதை ரசிகர்கள் பலரும் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.

-விளம்பரம்-

சிவராஜ்குமார் அளித்த பேட்டி:

இந்த போஸ்டருக்கு திரையுலக பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை ரஜினி மற்றும் படக்குழுவிற்கு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தில் நடிப்பது குறித்து சமீபத்தில் பிரபல ஊடகம் ஒன்றிற்கு சிவராஜ்குமார் பேட்டியளித்திருந்தார். அதில் அவர் கூறியிருந்தது, இயக்குனர் நெல்சன் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நெல்சன் மற்றும் தயாரிப்பு நிறுவனம் அறிவிக்கும். இந்த படத்தின் கதையை கேட்டு ஆச்சரியம் அடைந்து விட்டேன்.

ரஜினி குறித்து சொன்னது:

நிச்சயம் இந்த படம் வெற்றி அடையும். ரஜினிகாந்த் அவர்கள் எங்கள் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர். என்னுடைய 12 வயது முதலே ரஜினிகாந்த் அவர்களை எனக்கு நன்றாக தெரியும். ரஜினியுடன் நடிக்க யாருக்குத்தான் விருப்பம் இருக்காது. அவருடன் நடிக்கும் ஒரு அதிர்ஷ்டமான வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்று கூறியிருந்தார். இப்படி சிவராஜ்குமார் அளித்திருக்கும் பேட்டியின் மூலம் இவர் இந்த படத்தில் நடிப்பது கிட்டத்தட்ட உறுதி உறுதி செய்யப்பட்டது என்று கூறப்படுகிறது.

Advertisement