சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் நடிகை ரக்ஷிதா. இவர் கர்நாடகாவை சேர்ந்தவர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் தான் தமிழக மக்கள் மத்தியில் அறிமுகம் ஆகி இருந்தார். இதனை தொடர்ந்து இவர் பல சீரியல்களில் நடித்து இருந்தார். அதன் பின் இவர் சின்னத்திரையில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தார்.

பின் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த நாம் இருவர் நமக்கு இருவர் 2 என்ற சீரியலில் மகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது இவருக்கு கலர்ஸ் தமிழ் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. இதனால் இவர் நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியலில் இருந்து விலகி கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான இது சொல்ல மறந்த கதை சீரியலில் கமிட்டானார்.
ரக்ஷிதா நடித்த சீரியல்கள்:
இந்த தொடரில் அவருக்கு ஜோடியாக சத்யா சீரியல் புகழ் அமுல் பேபி விஷ்ணு நடித்து இருந்தார். சாதனா என்ற ரோலில் ரச்சிதாவின் நடிப்பு அனைவர் கவனத்தையும் பெற்றது. இதனால் பலரும் இந்த சீரியலை விரும்பி பார்க்க தொடங்கினர். பின் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கலந்து இருந்தார். அதற்கு பின் இவர் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் நடித்த பயர் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது.

ரக்ஷிதா விவாகரத்து:
இதனிடையே ரஷிதாவிற்கு சீரியல் நடிகர் தினேஷ் என்பவருடன் திருமணம் ஆனது. ஆனால், இவர்களுக்கு குழந்தைகள் எதுவும் இல்லை. இருவரும் பல வருடங்கள் சந்தோசமாக வாழ்ந்து வந்தார்கள். பின் கடந்த சில ஆண்டுகளாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள். பின் இருவரும் விவகாரத்து கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருக்கிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க கடந்த சில மாதங்களாகவே ரக்ஷிதாவிற்கு மே மாதம் இரண்டாவது திருமணம் நடைபெற இருப்பதாக சோசியல் மீடியாவில் பேசப்பட்டு வருகிறது.

ரக்ஷிதா பேட்டி:
இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் ரக்ஷிதா, என்னைப் பற்றி அடிக்கடி ஏதாவது ஒரு வதந்தி சோஷியல் மீடியாவில் வந்து கொண்டுதான் இருக்கிறது. அதேபோல் ஒவ்வொரு ஏப்ரல், மே மாதத்திலும் எனக்கு கல்யாணம் என்று பேச்சு வந்துவிடும். ஆனால், எந்த மே மாதம் என்று தான் யாரும் சொல்ல மாட்டாங்க. எனக்கே தெரியவில்லை. ஏற்கனவே கல்யாணத்தில் எனக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. இப்ப இதே போல அடிக்கடி பேசுவது கொஞ்சம் வேடிக்கையாக தான் இருக்கு. முதலில் அதிர்ச்சியாக இருந்தது. இப்ப எல்லாம் பழகி போய்விட்டது என்று கூலாக பதில் அளித்திருக்கிறார்






