சிம்புவுக்கு கல்யாணம் ஆனாதான் நான் கல்யாணம் பண்ணிப்பேன்- விஜய் டிவி சீரியல் நடிகை சொன்ன பகிர் தகவல்

0
120
- Advertisement -

சிம்புவுக்கு கல்யாணம் ஆன பிறகு தான் திருமணம் செய்து கொள்வேன் என்று விஜய் டிவி சீரியல் நடிகை கூறியிருக்கும் செய்தி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்பவர் சிம்பு. இவர் இயக்குனர், நடிகர் டி ராஜேந்திரன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. சிம்பு குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

இது ஒரு பக்கம் இருக்க, சிம்புவுக்கு தற்போது 40 வயதை கடந்து விட்டது. இருந்தாலும், இன்னும் அவருக்கு திருமணம் ஆகவில்லை. ஏற்கனவே நயன்தாரா, அன்சிகாவை சிம்பு காதலித்தது அனைவரும் அறிந்ததே. இவருக்கு காதல்கள் எதுவும் கை கூட வில்லை. அதோடு சிம்பு திருமணத்தை நினைத்து இவருடைய பெற்றோர்கள் கவலையில் இருக்கிறார்கள் என்றே சொல்லலாம். நிறை இடங்களில் டி ராஜேந்திரன் பெண் பார்த்து இருக்கிறார். இருந்தாலும் எதுவும் செட்டாகவில்லை.

- Advertisement -

சிம்பு திருமணம்:

மேலும், அடிக்கடி சோசியல் மீடியாவில் சிம்புவின் காதல் குறித்த செய்திகள் வைரலாகி வந்து கொண்டிருக்கின்றது. இன்னொரு பக்கம் டி ராஜேந்திரனும் பெண்ணை தேடிக் கொண்டிருக்கிறார். இதையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு சிம்பு தன்னுடைய கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் மணிரத்தினம் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் ‘தக் லைப்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சிம்பு படங்கள்:

இது மட்டும் இல்லாமல் எஸ்டிஆர் 48 என்ற படத்திலும் சிம்பு நடிக்கிறார். இன்னும் சில படங்களில் நடிக்க சிம்பு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் சிம்பு கல்யாணம் குறித்து விஜய் டிவி சீரியல் நடிகை ரேமா அசோக் கூறி இருக்கும் செய்தி தான் வைரலாகி வருகிறது. இவர் சின்னத்திரை சீரியல் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார். இவர் கல்யாணம் முதல் காதல் வரை, நாச்சியார்புரம், சின்னத்தம்பி போன்ற பல தொடர்களில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

ரேமா அளித்த பேட்டி:

இவர் சிம்பு உடைய தீவிர ரசிகை. இதனால் இவர் பேட்டி ஒன்றில், சிம்புவிற்கு திருமணமான பிறகு தான் நான் திருமணம் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியிருக்கிறார். இப்படி இவர் கூறியிருந்தது தான் சோஷியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், இடையில் சிம்பு படங்கள் தோல்வி அடைந்தது. இதன் காரணமாக சிம்பு சினிமாவில் இருந்து சிறிய பிரேக் எடுத்து கொண்டார்.

சிம்பு திரைப்பயணம்:

அந்த வகையில் பல போராட்டங்களுக்கு பிறகு வெளிவந்த சிம்பு நடித்த மாநாடு படம் வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து கடைசியாக சிம்பு நடிப்பில் வெளியான படம் பத்து தல. இந்த படத்தை இயக்குனர் ஒபேலி என். கிருஷ்ணா இயக்கி இருக்கிறார். ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படம் கன்னட மஃப்டி படத்தின் தமிழ் ரிமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.

Advertisement