பிரபல சீரியல் நடிகை ரித்திகாவுக்கு குழந்தை பிறந்திருக்கும் தகவல் தான் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த ‘ராஜா ராணி’என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகம் ஆகி இருந்தார் ரித்திகா. அதன் பின்னர் இவர் சிவா மனசுல சக்தி, சாக்லேட், திருமகள் என்று பல சீரியல்களில் நடித்திருந்தார். இருந்தாலும், பாக்கியலட்சுமி சீரியல் மூலம் தான் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல், அதிக வரவேற்பு பெற்று சென்று கொண்டிருக்கிறது. குடும்பப் பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என்பதை மையமாக வைத்து இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், இந்த சீரியலில் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் தான் ரித்திகா நடித்திருந்தார்.
ரித்திகா குறித்து:
மேலும் இவர் தொகுப்பாளினி, நடனம், பாடகர், ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் குக்கிங் ஷோ என பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருக்கிறார். அதோடு ரித்திகா 4ஜி என்ற குறும்படத்திலும் நடித்திருக்கிறார். குறிப்பாக, 2020 ஆம் ஆண்டு ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரித்திகாவுக்கு நல்ல புகழை தேடி தந்தது. இதனிடையே கடந்த 2022 ஆம் ஆண்டு ரித்திகா தமிழ்ச்செல்வி விஜய் டிவியில் பணியாற்றிய வினு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
ரித்திகா திருமணம்:
ரித்திகா திருமணம் செய்து கொண்ட வினு என்பவர் விஜய் டிவியில் கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றி வருகிறார். அதோடு ரித்திகாவின் கணவர் ஒரு தொழிலதிபர் எனவும் கூறப்படுகிறது. திருமணத்திற்கு பின் பாக்கியலட்சுமி சீரியலில் தொடர்ந்து நடித்த இவர், திடீர் என்று சீரியலில் இருந்து விலகி விட்டார். ஆனால், சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கிறார். அது மட்டுமல்லாமல், தனது வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு தருணங்களையும் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்.
ரித்திகா வளைகாப்பு:
மேலும், சமீபத்தில் தான் ரித்திகா தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து தனது கணவருடன் சேர்ந்து ரித்திகா பிரக்னன்சி போட்டோ ஷூட்டிங் நடத்தி இருந்தார். அந்தப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கூட இணையத்தில் வைரலாக இருந்தது. நிறை மாத கர்ப்பிணியாக இருந்த ரித்திகாவுக்கு வளைகாப்பும் நடத்தப்பட்டு இருந்தது. இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் விஜய் டிவி பிரபலங்கள் பலர் பங்கேற்று ரித்திகாவை வாழ்த்தி இருந்தார்கள்.
குழந்தை பிறந்தது:
தனது வளைகாப்பு புகைப்படங்களையும் சமூக வலைதள பக்கத்தில் ரித்திகா பகிர்ந்து இருந்தார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி, ரித்திகா மற்றும் வினு தம்பதியருக்கு குழந்தை பிறந்துள்ளது. அதை அவர்கள் ‘எங்கள் மகள்’ என்ற கேப்ஸன்னோடு குழந்தை பிறந்ததை அறிவித்துள்ளார்கள். தற்போது பிரபலங்கள், அனைவரும் ரித்திகாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். குழந்தை பிறந்தவுடன் மீண்டும் நான் நடிக்க தொடங்குவேன் என்று சமீபத்தில் ரித்திகா ஒரு நிகழ்ச்சியில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.