தன்னுடைய திருமணம் குறித்து முதன் முதலாக மனம் திறந்து நடிகை சரண்யா துராடி அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரையில் உள்ள பிரபலமான நடிகைகளில் ஒருவராக சரண்யா துராடி திகழ்ந்து வருகிறார். இளசுகள் மனதை கொள்ளை அடித்த நடிகைகளில் இவரும் ஒருவர். ஆரம்பத்தில் நடிகை சரண்யா அவர்கள் செய்திவாசிப்பாளராக மீடியாவில் நுழைந்தார். அதன் பின்னர் இவர் ராஜ், ஜீ தமிழ் என பல தொலைக்காட்சியில் பணியாற்றி இருந்தார். மேலும், இவர் ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி என்ற படத்திலும் நடித்து இருந்தார். அதன் பின்னர் இவர் சில படங்களில் நடித்தார். இருந்தும் சரியாக சினிமா வாய்ப்புகள் கிடைக்காததால் இவர் சின்னத்திரை நோக்கி பயணம் செய்தார்.

இவர் முதன் முதலாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த 'நெஞ்சம் மறைப்பதில்' என்ற சீரியலில் நடித்து இருந்தார். பின் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'ரன்' என்ற தொடரில் நடித்து இருந்தார். ஆனால், சரண்யா இந்த சீரியலில் இருந்து பாதியிலேயே விலகி விட்டார். அதன் பின்னர் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ஆயுத எழுத்து' சீரியலில் கமிட் ஆகி இருந்தார். ஆனால், இந்த சீரியலும் திடீரென்று நிறுத்தப்பட்டது. பின்னர் கிட்டத்தட்ட இவர் ஓராண்டுகள் எந்த சீரியலிலும் நடிக்காமல் தான் இருந்தார்.
சரண்யா குறித்த தகவல்:
அதன் பின் இவர் ‘வைதேகி காத்திருந்தாள்’ என்ற தொடரில் நடித்தார். 50 எபிசோடுகளை கடந்த பின் இந்த சீரியலும் திடீரென்று நிறுத்தப்பட்டது. பின் சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது இவர் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் தங்கமயில் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் அப்பா- மகன்களுக்கு இடையேயான பாச கதையை மையமாகக் கொண்டது. இந்த சீரியல் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது.

சரண்யா காதலர்:
இதற்கிடையே சரண்யா அவர்கள் ராகுல் என்பவரை கடந்த 2020 ஆம் ஆண்டிலிருந்து காதலித்து வந்திருந்தார். அதுமட்டுமில்லாமல் இவர்கள் இருவரின் புகைப்படங்கள் எல்லாம் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். அதுமட்டுமில்லாமல் இவர்களின் நிச்சயதார்த்தம் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் முன்னிலையில் நடந்திருந்தது. ஆனால், ராகுலுக்கும் தனக்கும் திருமணம் ஆனது குறித்து வெளிப்படையாக சரண்யா அறிவிக்கவில்லை. இதை அடுத்து கடந்த மாதம் ராகுலின் பிறந்தநாளுக்கு சரண்யா, ஹாப்பி பர்த்டே ஹஸ்பண்ட் என்ற கேப்ஷன் பதிவிட்டு இருந்தார்.
View this post on Instagram
சரண்யா திருமணம் :
இதன் மூலம் ரசிகர்கள், உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா? என்று கேட்டிருந்தார்கள். அதோடு சரண்யாவும் வரலட்சுமி பூஜையை செய்து இருந்தார். இது தொடர்பாக அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். மேலும் சரண்யாவின் தாலிக்கு ராகுல் குங்குமம் வைக்கும் வீடியோவும் பகிர்ந்து இருந்தார். இதை பார்த்து ரசிகர்கள், இவர்கள் இருவருக்கும் திருமணமானதை உறுதி செய்தார்கள். ஆனால், இதை வெளிப்படையாக சரண்யா சொல்லவில்லை.
https://www.youtube.com/watch?v=SABZ-AKnEMM
சரண்யா பேட்டி:
இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகை சரண்யாவிடம், உங்களுக்கு திருமணம் ஆன விஷயத்தை ஏன் கூறவில்லை? என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர், என்னுடைய பர்சனல் வாழ்க்கை பர்சனலாக இருக்கட்டும் என்று நினைத்து தான் நான் இதுவரை எனக்கு திருமணம் ஆன விஷயத்தை வெளியே சொல்லவில்லை. பர்சனலான விஷயங்கள் எங்களுக்குள் இருந்தால் மட்டும் போதும். இதனால் என்னுடைய தனிப்பட்ட விஷயங்களை சோசியல் மீடியாவில் ஷேர் செய்து கொள்வதில்லை என்று கூறியிருக்கிறார்.






