3வயது மகள் இருக்கும் நிலையில் இரண்டாம் குழந்தையை பெற்றடுத்த சீரியல் நடிகை ஸ்ரீதேவி.

0
383
- Advertisement -

சீரியல் நடிகை ஸ்ரீதேவிக்கு இரண்டாவது குழந்தை பிறந்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் ஸ்ரீதேவி. இவர் தமிழில் பல்வேறு சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து இல்லத்தரசிகள் மத்தியில் இடம்பிடித்து இருக்கிறார். இவர் தனுஷ் நடித்த ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ என்ற படத்தின் மூலம் தான் தனது திரை பயணத்தை தொடங்கினார்.

-விளம்பரம்-

அதன் பின்னர் இவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் அமையவில்லை. அதன் பின் இவர் சின்னத்திரை பக்கம் வந்து விட்டார். மேலும், இவர் தமிழில் ‘கஸ்தூரி’, ‘இளவரசி’, ‘வாணி ராணி’ என்று 20-க்கும் மேற்பட்ட சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். அதன் பின் இவர் சன் டிவி-யில் ஒளிபரப்பாகி இருந்த ‘பூவே உனக்காக’ மற்றும் விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ‘காற்றுக்கென்ன வேலி’ போன்ற சீரியல்களில் நடித்து இருந்தார்.

- Advertisement -

ஸ்ரீதேவி குறித்த தகவல்:

அதற்குப் பின் செம்பருத்தி, அரண்மனைக்கிளி, பொம்முக்குட்டி அம்மாவுக்கு போன்ற பல தொடர்களில் நடித்திருந்தார். குறிப்பாக ‘ராஜா ராணி’ சீரியலில் கொடூரமான வில்லியாக, பார்ப்பவர்களின் கண்களில் கத்திரி வெயிலைக் கடத்திக்கொண்டிருந்தவர் ஶ்ரீதேவி. ஆனால், நிஜத்தில் இவர் மார்கழி மாத அதிகாலைபோல செம கூல், பயங்கர ஜாலி டைப். மேலும், இவருக்கு செல்லப் பிராணிகளின் காதலி ஆவார். அவரைப்போலவே செல்லப் பிராணி காதலரான அசோக் சிந்தாலா என்பவரை இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

ஸ்ரீதேவி நடிக்கும் சீரியல்:

திருமணத்திற்கு பிறகும் இவர் சீரியலில் நடித்து வந்தார். சில வருடங்களுக்கு முன் இவர் கர்ப்பமாக இருந்தார். இவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பிறகு ஒரு சிறிய இடைவெளி எடுத்துக் கொண்டு மீண்டும் விஜய் டிவி சீரியலில் ஸ்ரீதேவி நடித்து வருகிறார். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மோதலும் காதலும், பொன்னி போன்ற தொடர்களில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

இரண்டாவது முறை கர்ப்பம்:

இப்படி இருக்கும் நிலையில் இவர் கடந்த ஆண்டு கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார். கர்ப்பமாக இருந்துமே இவர் சீரியலில் தொடர்ந்து நடித்து வந்தார். பின் இவருக்கு ஏழாவது மாதம் வளைகாப்பு சிறப்பாக நடைபெற்றது. அதனுடைய புகைப்படங்கள் கூட இணையத்தில் வைரலாகி இருந்தது. அதுமட்டுமில்லாமல் இவர் கர்ப்பமாக இருக்கும் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் பகிர்ந்திருந்தார்.

ஸ்ரீதேவிக்கு பிறந்த குழந்தை:

இப்படி இருக்கும் நிலையில் ஸ்ரீதேவிக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்து இருக்கிறது. இதை அவருடைய கணவர் சோசியல் மீடியாவில் பகிர்ந்து குழந்தையும்,தாயும் நலமுடன் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலருமே ஸ்ரீதேவிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். குழந்தை பிறந்த பிறகு ஸ்ரீதேவி தொடர்ந்து நடிப்பாரா? சீரியலில் இருந்து பிரேக் எடுத்து கொள்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement