எட்டு வருஷமா குழந்தை இல்ல, இப்போ கற்பமானதும் இப்படி பேசுறாங்க – சத்யா சீரியல் நடிகை ஸ்ரீவித்யா ஆதங்கம்.

0
392
Sreevidhya
- Advertisement -

எமோஷனலாக சத்யா சீரியல் நடிகை ஸ்ரீவித்யா அளித்திருக்கும் பேட்டி வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் அனிதா. இவருடைய உண்மையான பெயர் ஸ்ரீவித்யா நடராஜன். இவர் ஊட்டியை சேர்ந்தவர். ஆனால், இவருடைய பள்ளி, கல்லூரி படிப்பை எல்லாம் கோயம்புத்தூரில் தான் முடித்து இருக்கிறார். இவருக்கு மீடியாவின் மீது இருந்த ஆசையின் காரணமாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த கனா காணும் காலங்கள் என்ற சீரியலில் நடித்தார்.

-விளம்பரம்-

அதற்கு பிறகு தான் இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் வந்தது. மேலும், சன் டிவியில் சூப்பர் ஹிட் ஆன முந்தானை முடிச்சு தொடரில் ஸ்ரீவித்யா நடித்திருந்தார். அதனை தொடர்ந்து இவர் இளவரசி, அழகி, கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மடிப்பாக்கம் மாதவன், பொதிகை டிவியில் நிழல், ஜெயா டிவியில் கைராசி குடும்பம், ஜீ தமிழில் யாரடி நீ மோகினி, கல்யாணப்பரிசு, கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம் போன்ற பல தொடரில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார்.

- Advertisement -

ஸ்ரீவித்யா பேட்டி :

இருந்தாலும் இவருடைய கேரியரிலேயே திருப்புமுனையாக அமைந்த சீரியல் சத்யா தான். இந்த தொடர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி இருந்தது. இந்த தொடரில் அனிதா என்ற நெகட்டிவ் கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். இந்த சீரியலின் மூலம் இவருக்கு என்றே ஒரு தனி ரசிகர் கூட்டம் சேர்ந்தது. இதனிடையே இவர் அர்ஜுனன் கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் சமீபத்தில் நடிகை ஸ்ரீவித்யா பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர், எனக்கும் என்னுடைய கணவருக்கும் ட்ராவல் என்றால் ரொம்ப பிடிக்கும். கல்யாணத்திற்கு முன்னாடி நாங்கள் மூணார் போயிருந்தோம்.

சீரியல் குறித்து சொன்னது:

எனக்கு அந்த இடம் ரொம்பவே பிடிக்கும். சத்யா சீரியல் முடிந்த பிறகு ஒரு சின்ன பிரேக் கிடைத்தது. அப்போ போய்ட்டு வந்தோம். இப்போது விஜய் டிவியில் ஒரு புதிய தொடருக்கு செலக்ட் ஆகியிருக்கிறேன். அந்த சமயத்தில் கர்ப்பமாக இருக்கேன் என்று தெரிந்ததும் ஒரு வருஷம் பிரேக் எடுத்துக்கொண்டு குழந்தை பிறந்ததற்கு பிறகு நடிப்பை தொடரலாம் என்று நினைத்தேன். அதனால் பிரேக் எடுத்து இருக்கிறேன். பிரேக் எடுக்கப் போகிறேன் என்று என் கணவரிடம் சொன்னேன். அவர் உன்னுடைய முடிவு என்று சொல்லிவிட்டார். பின் கமிட்டான சீரியலுக்கும் நான் போன் பண்ணி விஷயத்தை சொன்னேன். அவர்களும் புரிந்து கொண்டு சரி என்று ஒத்து கொண்டார்கள்.

-விளம்பரம்-

கணவர் குறித்து சொன்னது:

என்னுடைய கணவர் விஜய் நடித்த சுறா படத்தில் அசோசியேட் கேமரா மேனாக இருந்தவர். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் பணியாற்றி இருக்கிறார். படத்தில் வேலை செய்து கொண்டே இவர் சீரியலிலும் பணியாற்றிருந்தார். சத்யா சீரியலில் நாங்க ரெண்டு பேருமே ஒண்ணா வேலை பார்த்தோம். நான் பொதுவாக இவர்களுடைய வேலையில் தலையிட மாட்டேன். பர்சனல் வேற, ப்ரொபஷனல் வேற என்பதில் ரெண்டு பேருமே தெளிவாக இருக்கிறோம். செட்டில் என்னை அவர் மேடம் என்று தான் கூப்பிடுவார்.

குழந்தை குறித்து சொன்னது:

நானும் சார் என்று தான் கூப்பிடுவேன். எப்பவுமே சுற்றி இருக்கிறவர்கள் பேச்சைக் கேட்டு ஸ்ட்ரெஸ் ஆகிக்காமல் கணவன், மனைவிக்குள் பேசிப் புரிதலோடு இருந்தால் போதும். அதுவே ஒரு நல்ல வாழ்க்கையை கொண்டு செல்லும். எட்டு வருடம் கழித்து தான் நான் கர்ப்பமானேன். இதற்காக நான் பல விமர்சனங்களை சந்தித்தேன். ஆனால், அதெல்லாம் பெரிசாக எடுத்துக் கொண்டது இல்லை. இப்போது எனக்கு 8 மாதம் ஆகிறது. நாங்க ரெண்டு பேரும் இந்த ஜர்னியை ரொம்ப சந்தோசமாக என்ஜாய் பண்ணிக் கொண்டிருக்கிறோம் என்று பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

Advertisement