பட வாய்ப்பு கிடைக்காததால் சீரியல் நடிகை தற்கொலை. மன அழுத்தத்தால் எடுத்த விபரீத முடிவு

0
11414
subarna-Jash
- Advertisement -

அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை நடிகர் நடிகைகள் தூக்கிலிட்டு தற்கொலை செய்வது வழக்கமான ஒன்றாக ஆகி விட்டது. அதுவும் அவர்களுடைய தற்கொலை மர்மமாகவே இருக்கிறது. கடைசி வரை அவர்கள் ஏன் தற்கொலை செய்து கொண்டார்கள்? எதற்காக தற்கொலை செய்து கொண்டார்கள்? என்பது குறித்த உண்மை காரணம் தற்போது வரை புரியாத புதிராகவே உள்ளது. அதுவும் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களில் நடிப்பவர்கள் தான் இந்த செயலில் அதிகம் ஈடுபடுகிறார்கள். அப்படி ஒரு விஷயம் தான் தற்போது பிரபல நடிகை விஷயத்தில் நடந்து உள்ளது. பெங்காலியில் துணை நடிகையாக நடித்து பிரபலமானவர் நடிகை சுபர்ணா ஜாஷ். இவர் மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர். இவர் கல்லூரியில் படிப்பதற்காக தன்னுடைய சொந்த ஊரான பர்த்வானிலிருந்து கொல்கத்தா வந்துள்ளார்.

-விளம்பரம்-
Image result for subarna jash

- Advertisement -

பின் தன் குடும்பத்துடன் தங்கி உள்ளார். இவருக்கு சினிமாவில் நடிகையாக வேண்டும் என்பது தான் கனவு. அதனால் சினிமாவில் வாய்ப்புத் தேடி அலைந்து உள்ளார். இந்த முயற்சியினால் இவர் முதலில் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானர். அதை பயன்படுத்தி சினிமாவில் துணை நடிகையாகவும் சில படங்களில் நடித்திருக்கிறார். படங்களில் நாயகியாக நடிப்பது தான் இவருடைய கனவு என்பதால் மீண்டும் வாய்ப்பை தேடி அலைந்தார். சமீபத்தில் இவருடைய நடிப்பில் பெங்காலியில் மயூரங்கி என்ற படம் வெளியாகி இருந்தது. ஆனால், இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இதனால் இவர் சில நாட்களாகவே மன உளைச்சலில் இருந்து உள்ளார்.

இந்நிலையில் நடிகை சுபர்ணா கடந்த 9ம் தேதி இரவு தனது அறையில் இருக்கும் மின் விசிறியில் தூக்குபோட்டு தொங்கினார். தன் மகள் இறந்த நிலையில் இருப்பதை பார்த்த பெற்றோர்கள் உடனடியாக சுபர்ணாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளார்கள். பின் அவரை மருத்துவர்கள் சோதித்துப் பார்த்து அவர் இறந்து விட்டதாக தெரிவித்து உள்ளார்கள். நடிகை சுபர்ணாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து உள்ளார்கள். மேலும், இந்த தகவலை காவல்துறைக்கும் தெரிவித்து உள்ளார்கள்.

-விளம்பரம்-
 subarna jash

நடிகை சுபர்ணாவுக்கு திரைப்பட வாய்ப்பு கிடைக்காததால் கடந்த சில மாதங்களாகவே அவர் மனத்தில் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். இதனால் தான் இவர் இந்த மாதிரி தவறான முடிவை எடுத்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. இவரின் மரணச் செய்தி பெங்காலி நடிகர், நடிகைகள் இடையே பெரும் பதட்டத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவருடைய மரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் போலீசார். போலீஸ் விசாரணைக்கு பிறகு தான் இது தற்கொலையா? கொலையா? என்பது தெரிய வரும் என்று போலீசார் கூறியுள்ளார்கள்.

Advertisement