பொம்பள எம்.ஆர்.ராதா..! வாடி ,போடினு கூப்பிடும் மனோரமா! பட வாய்ப்பை கொடுத்த நடிகை..!

0
2430
yaaradi-nee-mohini-serial
- Advertisement -

மேடை நாடகங்களின்மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தவர், சுஜாதா. 16 வயதிலேயே நாடகங்களில் நடித்தவர். தற்போது, ‘கங்கா’, ‘யாரடி நீ மோகினி’ ஆகிய சீரியல்களில் நடித்துவருகிறார். அவர் பற்றிய குட்டி பயோ… அப்புறம் ஒரு சாட்!

-விளம்பரம்-

sujatha

- Advertisement -

பெயர்: சுஜாதா
முதல் சீரியல்: ஆச்சி இன்டர்நேஷனல்
முதல் படம்: வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
குடும்பம்: அன்பான கணவர். அரவணைக்க இரண்டு பெண் குழந்தைகள்
ஆசை: நடிச்சுட்டிருக்கும்போதே உயிர் போகணும்
பிடித்த கதாபாத்திரம்: காமெடி

எனக்கு கோயம்புத்தூர். ஸ்கூல் படிக்கும்போதே நடிப்பு மேல அலாதி பிரியம். நிறைய நாடகங்களில் நடிப்பேன். பத்தாவது படிக்கும்போது செந்தாமரை சாருடன் சேர்ந்து எங்க ஸ்கூல் நாடகத்தில் நடிச்சேன். அதில் என் நடிப்பைப் பார்த்துட்டு, அவரே தில்லை ராஜம் ஐயாவிடம் அறிமுகப்படுத்தினார். அப்புறம், அந்தக் குழுவோடு இணைந்து நிறைய மேடை நாடகங்களில் நடிச்சேன். வீட்டிலும் என் விருப்பத்துக்கு கிரீன் சிக்னல் கொடுத்துட்டாங்க. 16 வயசுல நடிக்க ஆரம்பிச்சேன். மேடையில் நான் நடிச்சுட்டு வரும்வரை எனக்காக அம்மா காத்திட்டிருப்பாங்க. மேடை நாடகங்கள் மூலமா நேரடியா மக்களைச் சந்திக்க முடியும். அது அற்புதமான அனுபவம். உற்சாகத்தைக் கொடுக்கும்” எனப் புன்னகைக்கிறார் சுஜாதா.

-விளம்பரம்-

” ‘ஆச்சி இன்டர்நேஷனல்’ என்கிற சீரியலே முதல் சீரியல். அந்த சீரியலில் மனோரமா ஆச்சியோடு நடிச்சேன். அவங்களோடு முதன்முறை கேமரா முன்னாடி நின்னதும் உதறல் எடுத்துக்கிச்சு. ‘ஏன்டீ பயப்படுறே. தைரியமா நடி’னு சொன்னாங்க. நானும் நடிச்சேன். அப்புறம், வேற ஒரு ஷூட்டிங்ல, ‘ஏய் சுஜாதா… என்னடீ அம்மாவை கவனிக்காமலே போறே’னு கூப்பிட்டு அன்போடு விசாரிச்சாங்க. ஒரு நிமிஷம் திகைச்சுட்டேன். அவ்வளவு பெரிய ஆர்ட்டிஸ்ட் என்னிடம் உரிமையா பேசினது சந்தோஷமா இருந்துச்சு. அப்போ, நான் கன்சீவ் ஆகியிருந்தேன். என்னை நல்லா பார்த்துக்கிட்டாங்க. மனோரமா ஆச்சி, கோவை சரளா அக்கா, வடிவுக்கரசி அம்மா, லட்சுமி அம்மா மாதிரி நடிப்பில் பெயர் வாங்கணும்” என நெகிழ்கிறார் சுஜாதா.

sujatha actress

எல்லா நடிகர் நடிகைகளும் ஒருமுறையாவது மேடை நாடகங்களில் நடிக்க வேண்டும் என்பது இவரின் வேண்டுகோள். ”தியேட்டர் பிளேவில் நடிச்சால், சீரியலில் நடிக்கிறது ரொம்ப ஈஸி. எல்லோரும் முதல்ல தியேட்டர் பிளே பண்ணணும். மக்களை நேரடியா பார்த்து நம் நிறை குறைகளைத் தெரிஞ்சுக்க முடியும். ஷூட்டிங் போகிறதால் என் பசங்களை நல்லா பார்த்துக்க முடியலையோ என்கிற நெருடல் எனக்கு இருக்கும். ஆனால், என் பசங்க அப்படி நினைக்க மாட்டாங்க. முதல் பொண்ணு, பி.காம் ஃபைனல். இரண்டாவது பொண்ணு, ஆறாவது படிக்கிறாள். ‘அவங்கதான் என்னைப் பார்த்துக்கிறாங்க’ன்னு சொல்றதுதான் சரி.

அவங்க ஒத்துழைப்பினால்தான் தொடர்ந்து நடிக்க முடியுது. இதுவரை 50-க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடிச்சிருப்பேன். ‘அழகி’ சீரியலில் நான் நடிச்ச ‘பாஞ்சாலி’ கதாபாத்திரம் என் ஆல் டைம் ஃபேவரைட். இப்போ வரைக்கும் ஆடியன்ஸ் என்னை அந்தப் பெயரைச் சொல்லித்தான் கூப்புடுறாங்க. அந்த சீரியலில் நடிச்சபோது, டீமில் இருக்கிறவங்க ‘பொம்பளை எம்.ஆர்.ராதா’ எனக் கூப்பிடுவாங்க.

actress sujatha

அழகி’ சீரியலில் நடிச்ச விஜி, என் ஃப்ரெண்டு. அவங்களுக்கு சந்தானம் நடிச்ச ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தில் வாய்ப்பு கிடைச்சப்போ, ‘என்னைவிட அந்தக் கேரக்டரில் என் ஃப்ரெண்டு சுஜாதா நடிச்சா சரியா இருக்கும்’னு சொல்லி என்னை அறிமுகப்படுத்தினாங்க. அப்படித்தான் முதல் சினிமா வாய்ப்பு கிடைச்சது. அந்தப் படத்தில் ஃபர்ஸ்ட் சீன், ஒரே டேக்ல ஓகே பண்ணிட்டேன். அந்த டீம்ல எல்லோரும் எழுந்து நின்னு கைத்தட்டினாங்க. எனக்கு ரொம்பவே சந்தோஷமா இருந்துச்சு. உடனே விஜிக்கு ஃபோன் பண்ணி நன்றி சொன்னேன். நல்ல நண்பர்கள்தான் நான் சம்பாதிச்ச பெரிய சொத்து” என சிலிர்க்கிறார் சுஜாதா.

Advertisement