வெள்ளித்திரையில் கால்பதிக்கும் “தெய்வமகள்” வாணி போஜன்..! படத்தின் பெயர் மற்றும் கதை இதுதான்.!

0
311
vani-Bhojan

சீரியலில் நடித்து வரும் பல்வேறு நடிகர் நடிகைகளுக்கும் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் தேடிவந்த வண்ணம் இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் சீரியலில் நடித்து வந்த பிரியா பவனி ஷங்கர் தற்போது சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்துவிட்டார்.

Vani-Bhojan

இந்நிலையில் தொலைக்காட்சி சீரியலில் இருந்து அடுத்த வகையாக சன் டிவியில் ஒளிபரப்பான ‘தெய்வமகள்’ தொடரில் ‘சத்யா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்த நடிகை வாணி போஜன், தற்போது இயக்குனர் லோகேஷ் குமார் என்பவறின் இயக்கத்தில் “N4” என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கவிருக்கிறார்.

இயக்குனர் லோகேஷ் குமார் தமிழில் ஏற்கனவே “My son is a gay” என்ற படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் இயக்கவிருக்கும் இவரது இரண்டாவது படமான “N4″ ஒரு கமர்ஷியல் த்ரில்லர் படமாக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.”N4” சென்னை காசிமேடு பகுதியில் உள்ள போலீஸ் நிலையம் ஆகும்.ஆகவே காசிமேடு பகுதியை மையப்படுத்தி கதைக்களம் இருக்கும் என்பது கூடுதல் தகவல்

son-is-gay

ஏற்கன்வே இந்த படத்தில் நடித்து வரும் நடிகை வாணி போஜனின் சில புகைப்படங்கள் சமூக வளைதளத்தில் வெளியாகியுள்ளது. வாணி போஜனின் இந்த சிம்பிளான கெட் அப் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது . மேலும், “என்4” படத்தின் படப்பிடிப்புகளுக்காக சென்னை காசிமேட்டில் ஒரு செட் அமைக்கப்பட்டு இருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.