‘அப்போ வருத்தம், இப்போ மீண்டும் வாய்ப்பு’ – சன் டிவி சீரியலில் மீண்டும் இணையும் பிரபல ஜோடி

0
310
- Advertisement -

சீரியல் நடிகர் அருண் குமார் ராஜன் மற்றும் சீரியல் நடிகை நீலிமா மீண்டும் சீரியல் இணையும் செய்தி தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக திகழ்பவர் நீலிமா ராணி. இவர் உலகநாயகன் கமல் நடித்த ‘தேவர் மகன்’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகிற்கு அறிமுகம் ஆகி பல படங்களில் நடித்து இருக்கிறார். பின் திரைப்படங்களில் துணை நடிகையாக நடிக்க தொடங்கியவர், சீரியல்களிலும் என்ட்ரி கொடுத்தார்.

-விளம்பரம்-

மேலும், இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பல மொழி தொடர்களிலும் நடித்திருக்கிறார். அந்த வகையில் இவர் ராடன் தயாரிப்பில்‌ ‘வாணி ராணி’ சீரியலில் நடித்திருந்தார். சன் டிவியில் ஒளிபரப்பாகிய பிரபலமடைந்த சீரியல்களில் ஒன்று ‘வாணி ராணி’. இந்த தொடரில் நடிகை ராதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தத் தொடர் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பப்பட்டது. இத்தொடர் கிட்டத்தட்ட 1743 எபிசோட்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி இருந்தது.

- Advertisement -

டிம்பிள் – சூர்யா ஜோடி:

இந்த சீரியலில் நடிகை நீலிமாவுக்கு ஜோடியாக நடித்தவர் தான் நடிகர் அருண். வாணி ராணி தொடரில் டிம்பிள் -சூர்யா என்கிற இவர்களின் காம்பினேஷனுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் இருந்தது என்று சொல்லலாம். நடிகர் அருண் குமார் ராஜன் ‘அழகி’ சீரியல் மூலம் தன் சின்னத்திரை பயணத்தை தொடங்கியவர் நடிகர் அருண். தொடர்ந்து இளவரசி, வாணி ராணி, சந்திரலேகா, பூவே உனக்காக, பிரியசகி உட்பட பல பிரபலமான சின்னத்திரை தொடர்களில் என 12 ஆண்டுகளுக்கு மேலாக சீரியல்களில் நடித்து வருகிறார்.

வானத்தைப் போல சீரியல்:

ஆனால், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு நீலிமா மற்றும் அருண் தனித்தனியே தங்களது கரியரில் பிஸியாக இருந்தார்கள். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் அதாவது ஒன்பது ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஜோடியாக இவர்கள் ‘வானத்தைப் போல’ தொடரில் கமிட் ஆனார்கள். ‘வானத்தைப் போல’ சன் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி சமீபத்தில் முடிவடைந்த ஒரு ஹிட் சீரியல் ஆகும். இந்த சீரியலில் முதலில் அருண் கமிட்டாக, அவருக்கு ஜோடியாக நீலிமாவை ஒப்பந்தம் செய்தார்கள்.

-விளம்பரம்-

திடீரென்று முடிக்கப்பட்டது:

அந்த சீரியலில் கமிட்டாகும் போதே, ‘நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரும்பவும் சீரியல் பக்கம் வருகிறேன். அதனால் என்னுடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்கிற மாதிரி பார்த்துக்கோங்க’ என்று சொல்லிவிட்டு தான் நீலிமா நடிக்க தொடங்கினாராம். இப்படி இருவரும் கமிட்டாகி நடிக்க தொடங்கி சில நாட்களிலேயே வானத்தைப் போல சீரியல் திடீரென்று முடிக்கப்பட்டது. நல்ல டிஆர்பி கிடைத்து வந்த நிலையில், ஏன் அந்த சீரியல் முடிக்கப்பட்டது என்பது சேனலுக்கு மட்டுமே தெரியும்.

மீண்டும் இணையும் நீலிமா-அருண்:

இதனால் நீலிமா மற்றும் அருண் மிகவும் அப்செட் ஆனார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இவர்கள் இணைவதால், நல்ல கம் பேக் ஆக இருக்கும் என்று நீலிமா நினைத்த நிலையில், வானத்தைப் போல முடிக்கப்பட்டது நீலிமாவுக்கு வருத்தம் என செய்திகள் வெளியாகி இருந்தது. தற்போது அதை சரிக்கட்டும் வகையில், சேனல் ஒரு விஷயம் செய்திருக்கிறது. அதாவது, விரைவில் ஒளிபரப்பாகும் சீரியல் ஒன்றில் மீண்டும் அருண்- நீலிமா ஜோடியாக நடித்த கமிட்டாகி இருக்கிறார்களாம். அந்தத் தொடருக்கு ‘ராகவி’ என பெயர் வைத்துள்ளதாகவும். அதற்கான சூட்டிங் சில தினங்களில் தொடங்குவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

Advertisement