விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் அப்பத்தா, தமிழின் அப்பா அம்மா எல்லோருமே பதறி அடித்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு கிளம்பினார்கள். இன்னொரு பக்கம் மண்டபத்திற்கு சென்ற ஐசு,சேது-தமிழை ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்று இருக்கும் விஷயத்தை சொன்னார். இதைக் கேட்டு ஈஸ்வரிக்கு பயங்கர கடுப்பானது. சாவித்திரி- தாமரை இருவரும் சந்தோஷப்பட்டார்கள். பின் ஹாஸ்பிடலில் தமிழ் உறவினர்கள் வரும் வரை எதுவும் செய்ய முடியாது என்று டாக்டர் சொல்லிவிட்டார். சேது, எதுவுமே பேச முடியாமல் அமைதியாக நிற்கிறார்.

நல்லபடியாக தமிழ்ச்செல்விக்கு ஆண் குழந்தை பிறந்து விடுகிறது. அப்பத்தா, குழந்தையை தூக்க சொல்லி கேட்டார். ஆனால் சேது, தமிழ்ச்செல்வி செய்த துரோகத்தை நினைத்து அங்கிருந்து கிளம்பி வந்து விட்டார். அதற்குப்பின் தமிழ்ச்செல்விக்கு மீண்டும் பிரசவ வலி வந்து அழகான பெண் குழந்தை பிறக்கிறது. ரெட்டை குழந்தை பிறந்திருப்பதால் மொத்த குடும்பமும் சந்தோஷமாக இருக்கிறது. மண்டபத்திற்கு சேது வந்ததை பார்த்து எல்லோரும் சந்தோஷப்பட்டார்கள். ஈஸ்வரி, சீக்கிரம் கல்யாணம் நடக்கட்டும் என்றார்.
சின்ன மருமகள்:
சாவித்திரி, நல்ல நேரம் முடிந்துவிட்டது. திருமணத்தை எல்லாம் இப்போது நடத்த முடியாது என்று சொன்னார். மோகனா, என்ன குழந்தை பிறந்து இருக்கிறது என்று கேட்டார். சேதுபதி, ஆண் குழந்தை என்று சொன்னார். ராஜாங்கம் சந்தோசப்பட்டார். அதற்குப்பின் கல்யாணத்தை நடத்தியே தீர வேண்டும் என்று ஈஸ்வரி சொன்னார். சாவித்திரி நடத்தக்கூடாது என்று பிரச்சனை செய்தார். சேது எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ஈஸ்வரியின் மகள், அப்பத்தா உள்ளே வந்தவுடன் நான் ரொம்பவே பயந்து விட்டேன். நீ சொன்னவுடனே சேது தாலியை ஐசு கழுத்தில் வைத்திருந்தான், கட்டவில்லை. நான்தான் மூன்று முடிச்சியுமே போட்டேன் என்று சொல்கிறார். ஈஸ்வரி, ஐசு திருமணம் நடந்து விட்டது. அவனுமே நம்பி விட்டான் என்று சொல்லி சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் தமிழ்ச்செல்வி, கண்விழித்து என்னுடைய இரண்டு குழந்தைகளில் ஒன்று இருக்கு. இன்னொன்று எங்கே? என்று கேட்கிறார். அப்பத்தா ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார். ஆனால், தமிழ்ச்செல்வி ஒத்துக் கொள்ளவே இல்லை.

சீரியல் ட்ராக்:
கடைசியில் அப்பத்தா, குழந்தை சேதுவிடம் கொடுத்த விஷயத்தை சொல்லி விடுகிறார். இதனால் கோபப்பட்ட தமிழ்செல்வி, அப்பத்தாவை திட்டி குழந்தையை அழைத்து வருவதற்கு செல்கிறார். ஆனால்,
உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் தமிழ்ச்செல்வி மயங்கி கீழே விழுகிறார். பின் டாக்டர், எல்லோரையும் திட்டி விட்டு தமிழ் உடல் நலத்தை கவனமாக பார்த்துக்கொள்ள சொல்கிறார்கள். இன்னொரு பக்கம் ஐசு-சேதுவிற்கு தேவையான சடங்குகள் எல்லாம் செய்கிறார்கள். அப்போது குழந்தை அழுது கொண்டிருப்பதால் சேது முழு மனதுடன் எந்த சடங்கையும் செய்யாமல் அங்கிருந்து சென்று விடுகிறார்.






