விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் குமார், கோமதி- ராஜி வீட்டிற்கு வந்த விஷயத்தையும், பாண்டியன்- முத்துவேல் இருவரும் பேசிக் கொண்ட விஷயத்தையும் சொன்னார். இதைக் கேட்டு சக்திவேல் பயங்கரமாக கொந்தளித்தார். சீக்கிரத்திலேயே ஏதாவது செய்து இரண்டு குடும்பத்தையும் பிரிக்க வேண்டும் என்று குமார்- சக்திவேல் இருவரும் திட்டம் போட்டார்கள். இன்னொரு பக்கம் பாண்டியன் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருக்கும் போது தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை வாங்கிக்க சொல்லி நபர் ஒருவர் கேட்டார். பாண்டியன், அதெல்லாம் தேவையில்லை என்று அந்த நபரை அனுப்பி விட்டார். அதற்குப்பின் பாண்டியன், சரவணன் தன்னுடைய குழந்தையை பற்றி கூட கவலை இல்லாமல் இருக்கிறான்.

அது நம்ம வீட்டு வாரிசு. நீ தங்கமயிலின் வீட்டிற்கு சென்று கொஞ்சம் பணத்தை கொடுத்து விட்டு வா என்றார். கோமதியும் தங்கமயில் வீட்டிற்கு போனார். ஆனால், தங்கமயில் அங்கு இல்லை. பாக்கியம் தான் இருந்தார். வழக்கம்போல பாக்கியம், பாண்டியன் குடும்பத்தை குறை சொல்லிக் கொண்டிருந்தார். கோமதி பெரிதாக கண்டுகொள்ளாமல் பணத்தை டேபிள் மீது வைத்து விட்டு அங்கிருந்து சென்றார். கோமதி ஆட்டோவில் ஏறி செல்வதை தங்கமயில் பார்த்து விட்டார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
கோமதி கொடுத்த பணத்தை தங்கமயில் மீண்டும் கோமதி இடமே கொடுத்து விட்டார். இதை பார்த்து சரவணன் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். இன்னொரு பக்கம் காந்திமதியிடம் கதிர்-ராஜி இருவரும் முத்துவேல் உடைய உடல்நிலை பற்றி விசாரித்தார்கள். காந்திமதியுமே கதிர் செய்த உதவியை பற்றி பேசி ரொம்பவே பெருமைப்பட்டார். இதை எல்லாம் பார்த்து சக்திவேல் கோபப்பட்டார். அதற்கு பின் வீட்டு செலவு அதிகமாவதால் செந்தில் புலம்பினார். மீனா, செலவை பார்த்து பண்ணனும். உங்க இஷ்டத்துக்கு செய்தால் இப்படி தான் நடக்கும் என்றார்.

சீரியல் ட்ராக்:
சரவணனை பார்த்து மயில் எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்றார். உடனே சரவணன், ரொம்ப ஓவராக நடிக்காதே. எங்கள் அம்மா பணத்தை கொடுத்தால் எதற்கு திருப்பி கொடுக்கிறாய்? அது உனக்காக கொடுக்கவில்லை. குழந்தைக்காக கொடுத்தது என்று கோபமாக பேசி இருந்தார். தங்கமயில், அதுதான் உங்கள் குழந்தை இல்லையே, எதற்காக பணம் கொடுக்கணும் என்றார். சரவணன், குழந்தை பிறந்த உடனே உன்னுடன் விடமாட்டேன். என்னுடைய வீட்டிற்கு எடுத்து வந்து வளர்ப்பேன் என்றெல்லாம் சவால் விட்டார்.
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் சக்திவேல் கொடுத்த பொய் புகாரால் போலீசில் போலீஸ் கதிரை கைது செய்து விடுகிறார்கள். பாண்டியன், என்ன நடந்தது என்று விசாரிக்கிறார். கதிர், குமார் தான் முத்து வேலை தள்ளிவிட்டார். ஆனால், நான் உண்மையை சொல்லவில்லை என்று சொல்கிறார். இன்னொரு பக்கம் ஹாஸ்பிடலில் கண்விழித்த முத்துவேலிடம் போலீசார் விசாரணை நடத்துகிறார்கள். குமார், என்ன நடக்குமோ? என்று பயத்தில் இருக்கிறார்






