ஜாதிய ஒழிக்க படம் எடுத்தா, இவனுங்க ஜாதி கொடியோட போறானுங்க – வீடியோவை கண்டு கடுப்பான ரசிகர்கள்.

0
1301
karnan

‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த மாரி செல்வராஜ் இயக்கத்தில் தேசிய விருது பெற்ற நாயகன் தனுஷ் நடிப்பில் உருவான ‘கர்ணன்’ திரைப்படம் இன்று (ஏப்ரல் 9) வெளியாகியுள்ளது. ரஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா, கௌரி கிஷன், நட்டி என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வேற லெவல் ஹிட் அடித்தது. மேலும், பண்டாரத்தி பாடல் சில சர்ச்சைகளை ஏற்படுத்தியதால் இந்த படத்தின் பாடல் வரிகளில் சில மாற்றங்களையும் செய்தார் மாரி செல்வராஜ். இப்படி வெளியாகும் முன்னரே பல சர்ச்சைகளை சந்தித்த இந்த திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

1995ல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கொடியங்குளம் கிராமத்தின் மீது காவல்துறை கொடுமையான தாக்குதல் ஒன்றை நடத்தியது. அதில் பலர் கொல்லப்பட்டனர். பல கிராமங்கள் சூறையாடப்பட்டன. தாக்குதலில் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். இந்தப் பின்னணியை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது ‘கர்ணன்’.இப்படி ஒரு நிலையில் கர்ணன் திரைப்படத்தை காண திரையரங்கிற்கு குறிப்பிட்ட சமூகத்தினர் தங்களது சமூக கொடியுடன் சென்றுள்ளனர்.

- Advertisement -

அதிலும் குறிப்பிட்ட அந்த சமூக கொடியை ஏந்திய சிலர் திரையரங்கின் வெளியே பட்டாசு வெடித்து கோஷமிட்டனர். அந்த வீடியோவை தியேட்டரின் ட்விட்டர் பக்கம் பபிறந்துள்ளது. இதை பார்த்த பலரும் ஜாதி ஒழிய வேண்டும் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று படத்தை எடுத்தால் இப்படி தியேட்டருக்கு சமூக கொடிகளை தூக்கி செல்வது என்ன நியாயம் என்று கழுவி ஊற்றி வருகின்றனர்.

ஏற்கனவே தனுஷின் கர்ணன் படத்தை தடை செய்ய வேண்டும் என்று முக்குலத்தோர் புலிப்படை சார்பில் போலீசில் புகார் மனு கூட அளிக்கப்பட்டது. 1991-ல் கொடியன்குளம் மணியாச்சி சாதி கலவரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் படம் தான் கர்ணன். இந்த படத்தை தடை செய்ய வேண்டும். மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பை திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும்.தற்போது தான் தென்மாவட்டங்களில் அமைதியான சூழ்நிலை நிலவி வருகின்றது. இந்த நிலையில் இதுபோன்ற திரைப்படங்களால் மீண்டும் ஒரு கலவர சூழ்நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

-விளம்பரம்-

அதோடு அந்தத் திரைப்படத்தில் மணியாச்சி காவல்நிலையம் என்று பெயரிட்டு அந்த காவல்நிலையத்தை தனுஷ் தாக்குவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. இது காவல்துறை கண்ணியத்தை கெடுப்பதாக அமைகிறது. குறிப்பாக அந்தத் திரைப்படத்தில் தேவர் சமூகத்தை மிகவும் விமர்சித்து வருகிற காட்சிகள் இடம்பெறுகிறது. ஆகையால் இதுபோன்ற திரைப்படங்கள் எடுத்து இரு சமூக மக்களிடையே சாதி கலவரத்தை தூண்டி வருகிற இயக்குனர் மாரி செல்வராஜை கைது செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தகக்து.

Advertisement