சத்தமில்லாமல் திருமணத்தை முடித்த செவ்வந்தி சீரியல் நடிகை – மாப்பிள்ளை இந்த விஜய் டிவி நடிகர் தான்.

0
2238
divya
- Advertisement -

செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யாவுக்கு திருமணம் ஆகி உள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. பல ஆண்டு காலமாக மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக தொலைக்காட்சி சீரியல்கள் திகழ்கிறது. அதிலும் சமீப காலமாக தொலைக்காட்சித் தொடர்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது. இதனால் ஒவ்வொரு சேனலும் தங்களுடைய சேனலின் டிஆர்பி ரேட்டிங்காக வித்தியாசமான கதைக்களத்துடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.

-விளம்பரம்-

அந்த வகையில் தொலைக்காட்சி என்ற ஒன்று தொடங்கியதிலிருந்தே சீரியலுக்கு பெயர் போன சேனல் சன் டிவி தான். அந்த அளவிற்கு பல சூப்பர் ஹிட் தொடர்களை சன் டிவி வழங்கி இருக்கிறது. காலை 10 மணியில் தொடங்கி இரவு வரை விடாமல் தொடர்கள் ஒளிபரப்பி வருகிறார்கள். இதனால் எப்போதுமே சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் எல்லாம் டிஆர்பி டிவியில் முன்னிலையில் வகித்து வருகிறது.

- Advertisement -

சன் டிவி சீரியல்கள்:

சன் டிவியில் கயல், ரோஜா, வானத்தைப்போல, சுந்தரி, எதிர்நீச்சல், அன்பே வா, கண்ணான கண்ணே போன்ற பல சூப்பர் ஹிட் தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் தற்போது சன் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பான தொடர் தான் செவ்வந்தி. 90 களில் தொடர்களிலும், படங்களிலும் கலக்கிய நடிகர் ராகவ் தான் இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர் சினிமா துறையில் நடிகர் மட்டுமல்லாமல் மியூசிக் கம்போஸ்ஸர், தொகுப்பாளர், இயக்குனர் என பல முகங்களைக் கொண்டவர்.

-விளம்பரம்-

செவ்வந்தி சீரியல்:

நடிகர் ராகவ் ஒரு சிறந்த டான்ஸர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இவரை அடுத்து சீரியலில் நடிகை திவ்யா ஸ்ரீதர் நடிக்கிறார். ஏற்கனவே இவர் மகராசி என்ற தொடரின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது செவ்வந்தி சீரியலில் நடித்து கொண்டு இருக்கிறார். இந்த சீரியல் ஒளிபரப்பான குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொண்டிருக்கிறது. அதோடு சீரியல் பல திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கிறது.

திவ்யா திருமணம்:

இந்த நிலையில் இந்த தொடரில் கதாநாயகியாக நடிக்கும் திவ்யாவிற்கு திருமணம் நடைபெற்று இருக்கிறது. இவர் திருமணம் செய்து கொண்ட நபரும் சீரியல் நடிகர் தான். அவர் வேற யாரும் இல்லைங்க, விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் செல்லம்மா தொடரின் நாயகன் சித்து , ஆர்னவ் தான். இவர் ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பான கல்யாண பரிசு என்ற தொடரின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். திவ்யாவும், நடிகர் ஆர்ணவும் நீண்ட நாள் நண்பர்கள்.

வைரலாகும் திவ்யா-ஆர்னவ் புகைப்படம்:

இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை எல்லாம் தங்களுடைய சோசியல் மீடியாவில் பதிவிட்டிருந்தார்கள். இந்த நிலையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து இருக்கிறார்கள். இதை திவ்யா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். மேலும், இவர்களுடைய திருமணத்தை சென்னை புரசைவாக்கத்தில் உள்ள ரெஜிஸ்டர் ஆபிஸில் பதிவு செய்திருக்கிறார்கள். தற்போது சோசியல் மீடியாவில் இவர்களுடைய திருமண புகைப்படங்கள் வைரலானது தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement