லீட் ரோல்னு கூப்டாங்க, ஒரு ரியாலிட்டி ஷோக்கும் கூப்படல, வெளியால் மாதிரி இருக்கேன் – செவ்வந்தி சீரியலில் இருந்து விலகிய ஜீ தமிழ் நடிகர்.

0
423
Sevvanthi
- Advertisement -

அதிலும் சமீப காலமாக தொலைக்காட்சித் தொடர்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது. இதனால் ஒவ்வொரு சேனலும் தங்களுடைய சேனலின் டிஆர்பி ரேட்டிங்காக வித்தியாசமான கதைக்களத்துடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது சன் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பான தொடர் தான் செவ்வந்தி. 90 களில் தொடர்களிலும், படங்களிலும் கலக்கிய நடிகர் ராகவ் தான் இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

-விளம்பரம்-

இவர் சினிமா துறையில் நடிகர் மட்டுமல்லாமல் மியூசிக் கம்போஸ்ஸர், தொகுப்பாளர், இயக்குனர் என பல முகங்களைக் கொண்டவர். இவர் செவ்வந்தி சீரியலில் கதாநாயகனாக நடித்த நிலையில் சில காரணங்களினால் அவர் கதையில் இருந்து விலக நேர்ந்தது. அதன் காரணமாக அவர் இறந்தது போல கதையை மாற்றி கதை சென்றதால் தற்போது அவர் இந்த சீரியலில் நடிக்கவில்லை.

- Advertisement -

இப்படி இருக்கும் போது ஏற்கனவே பல நடிகர்கள் செவ்வந்தி சீரியலை விட்டு வெளியேற்றிய நிலையில் தற்போது மீண்டும் ஒரு நடிகர் வெளியேற இருக்கிறார் என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது “என்றென்றும் புன்னகை” என்ற சீரியலில் நடித்த நிதின் கிரிஷ் என்பவர் தற்போது செவ்வந்தி சீரியலில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை ஸ்ட்ரோரியாக போட்டு பின்னர் திடீரென அதனை நீக்கிவிட்டார்.

அந்த பதிவில் நிதின் கிரிஷ் கூறியதாவது “எல்லோருக்கும் வணக்கம். கனத்த இதயத்துடன் செவ்வந்தி சீரியலில் ‘கார்த்தி’ கதாபாத்திரத்தில் இருந்து நான் விலகுகிறேன். நேர்மையாக முன்னணி கதாபாத்திரங்களில் ஒருவராக இருந்ததால், நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன், ஏனென்றால் நான் வாக்குறுதியளித்த திரை இடத்தை நான் ஒருபோதும் பெறவில்லை, ஒரு நடிகராக எனது நடிப்பையும் திறமையையும் வெளிப்படுத்த ஒருபோதும் வாய்ப்பு கிடைக்கவில்லை. நான் ஒரு மாதத்திற்கு 2-3 நாட்களுக்கு மேல் வேலை செய்யவில்லை.

-விளம்பரம்-

எந்த விதமான விளம்பரங்களும் கிடைத்ததில்லை அல்லது எந்த ரியாலிட்டி ஷோக்களுக்கும் என்னை அழைக்கவில்லை. நான் ஒரு வெளியாள் போல் உணர்ந்தேன். இது நிதி ரீதியாக என்னைப் பாதித்தது மற்றும் தொழில் ரீதியாக எந்த விதமான முன்னேற்றத்தையும் அல்லது வளர்ச்சியையும் நான் காணவில்லை. இருந்தாலும் நான் சில அற்புதமான கலைஞர்களுடன் பணிபுரிந்தேன் மற்றும் தயாரிப்பு உண்மையில் என்னை நன்றாக கவனித்துக்கொண்டார்கள். தயாரிப்பிற்கு நன்றி சொல்ல விரும்புகிறேன் என்று பதிவிட்டிருந்தார்.

ஆனால் சில மணி நேரத்திலேயே அந்த பதிவை நீக்கிய அவர் மீண்டும் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவை இட்டிருந்தார் அந்த பதிவில் ” சில சட்ட காரணங்களுக்காக முந்தைய ஸ்டோரியை அகற்ற வேண்டியிருந்தது, எனவே இதை மீண்டும் பகிர்கிறேன். இது புதிய விஷியங்களை நோக்கி பயணிக்கும் தருணம். அதோடு இரண்டு முக்கியமான விஷியங்களை விரைவில் அறிவிக்கிறேன் என்று கூறினார். கடந்த சில காலமாகவே பல நடிகர்கள் இந்த தொடரில் இருந்து விலகியா நிலையில் இவரின் விலகலும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Advertisement