நான் செஞ்ச தப்ப யாரும் பண்ணாதீங்க – ஷகீலா உருக்கமான வேண்டுகோள்.

0
96225
shakeela
- Advertisement -

சினிமா உலகில் சில்க் ஸ்மிதாவுக்கு பிறகு கவர்ச்சி நாயகியாக வலம் வந்தவர் நடிகை ஷகிலா. ஷகிலா பெயர் சொன்னால் போதும் அனைத்து ரசிகர்களும் குஷியாகி விடுவார்கள். அந்த அளவிற்கு இவருடைய படங்களில் தாராளமாக கவர்ச்சி காட்டிய நடிகை. இவர் தமிழ் சினிமா உலகில் துணை நடிகையாக தன்னுடைய திரைப் பயணத்தை தொடங்கினார். இவர் ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். கவுண்டமணியுடன் சில படங்களில் நகைச்சுவை காட்சிகளிலும் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

இவருடைய குடும்ப சூழ்நிலை காரணமாக இவர் மலையாள கரையோரம் ஒதுங்கி கவர்ச்சி படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இவர் முதலில் கவர்ச்சி நாயகியாக வலம் வந்தது மலையாள மொழி படங்களில் தான். அதனாலேயே இவருக்கு கேரளாவில் அதிக ரசிகர்கள் உள்ளார்கள் என்று சொல்லும் அளவுக்கு கவர்ச்சி விருந்து படைத்தவர்.இவருடைய கவர்ச்சி படங்களுக்கு ரசிகர்கள் மயங்காதவர்கள் இருக்க மாட்டார்.

- Advertisement -

இதனாலே ஷகிலா படங்களுக்கு திருவிழா போன்று கூட்டம் கூடும். சகிலா படம் ரிலீசாகும் என்றால் அங்கு சூப்பர் ஸ்டார்களின் படங்கள் கூட ஓடாது. அந்த அளவிற்கு சகிலா கவர்ச்சி நாயகியாக வலம் வந்தார். மேலும், இவர் மலையாளம், தெலுங்கு, இந்தி, தமிழ் என பல மொழிகளில் இவர் படங்களில் நடித்து உள்ளார்.ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் ஒன்று உருவாகி உள்ளது. இப்படத்தை இந்திரஜித் லங்கேஷ் இயக்கி இருக்கிறார். நேரிடையாக இந்தி மொழியில் எடுக்கப்பட்ட இப்படம், ஒரே நேரத்தில் தமிழ், கன்னடம், தெலுங்கு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வரும் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று வெளியாகவுள்ளது.

இப்படத்தில், ஷகிலாவாக ரிச்சா சத்தா நடிக்கிறார். இந்தப் படத்திற்கு சென்சாரில் A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் ஷகிலா பேசும் போது, எனக்கு தெரிந்து நான் செய்த தவறை தற்போது சினிமா துறைக்கு வரும் நடிகைகள், படிக்கும் மாணவிகள் அனைவருக்கும் ஒன்று சொல்லுகிறேன். என்னை போல் யாரும் ஏமாந்து விடாதீர்கள். அதைத்தான் என் புக்கில் எழுதி இருக்கிறேன். இதைத்தான் படமாக எடுத்து இருக்கிறார்கள். பெண்களுக்கு மேசேஜாக இந்த திரைப்படம் இருக்கும்என்று கூறியுள்ளார். .

-விளம்பரம்-
Advertisement