‘அநியாயம் பண்ணாதீங்க’ இரவில் பேச்சுலர்ஸ்க்காக வீதியில் இறங்கி போராடிய ஷகிலா. பரபரத்த அபார்ட்மென்ஸ்.

0
248
shakeela
- Advertisement -

பேச்சுலர்ஸ்க்காக இரவில் வீதியில் இறங்கி நடிகை ஷகிலா போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் சில்க் ஸ்மிதாவுக்கு பிறகு கவர்ச்சி நாயகியாக வலம் வந்தவர் நடிகை ஷகிலா. ஷகிலா பெயர் சொன்னால் போதும் அனைத்து ரசிகர்களும் குஷியாகி விடுவார்கள். ஏன்னா, போதும் போதும் என்ற அளவிற்கு இவருடைய படங்களில் தாராளமாக கவர்ச்சி காட்டிய நடிகை.

-விளம்பரம்-

இவர் தமிழ் சினிமா உலகில் துணை நடிகையாக தன்னுடைய திரைப் பயணத்தை தொடங்கினார். பின் இவருடைய குடும்ப சூழ்நிலை காரணமாக இவர் மலையாள கரையோரம் ஒதுங்கி கவர்ச்சி படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதனாலேயே இவருக்கு கேரளாவில் அதிக ரசிகர்கள் உள்ளார்கள் என்று சொல்லும் இவருடைய கவர்ச்சி படங்களுக்கு மயங்காத ரசிகர்களே இல்லை. மேலும், ஷகீலா தனது வாழ்கை வரலாற்றை படமாக எடுத்து இருக்கிறார். இளமை போன பின்னரும் இவர் பல படங்களில் நடித்து இருந்தார்.

- Advertisement -

ஷகீலா திரைப்பயணம்:

கவர்ச்சி நடிகையாக இருந்த இவரை தற்போது அம்மா என்று சொல்லும் அளவிற்கு மாற்றியது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். கடந்த இரண்டாம் சீசனில் சகிலா போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். அதில் இவர் மிக திறமையாக விளையாடி இரண்டாம் இடத்தை பிடித்து இருந்தார். மேலும், இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஷகீலா பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

சென்னை குடியிருப்பு பகுதியில் நடந்தது:

இந்த நிலையில் பேச்சுலர்ஸ்க்காக இரவில் நடிகை சகிலா போராடியிருக்கும் சம்பவம் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, சென்னை சூளைமேடு பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று இருக்கிறது. இந்த குடியிருப்பில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அதேபோல் அங்கு பேச்சிலர்கள் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகின்றனர். மேலும், இந்த குடியிருப்பு பகுதியில் வசிப்பவர்கள் மாதந்தோறும் பராமரிப்பு தொகை செலுத்தி வருகின்றனர். இப்படி இருக்கும் நிலையில் சில தினங்களுக்கு முன்பு பராமரிப்பு தொகை கட்டவில்லை எனக் கூறி சுமார் 40க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

-விளம்பரம்-

போராட்டத்தில் ஈடுபட்ட பேச்சுலர்ஸ்:

இதனால் தண்ணீர் கிடைக்காமல் மக்களும் பயங்கரமாக கஷ்டப்பட்டு இருந்தார்கள். இது குறித்து அடுக்குமாடு குடியிருப்பு நிர்வாகத்திடம் மக்கள் கேட்ட போது அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை. இதனால் தான் நேற்று இரவு 20-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்த போராட்டத்தில் பெரும்பாலானோர் பேச்சுலர்ஸ் ஆக இருந்தார்கள். தண்ணீர் பிரச்சினை சரி செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கையும் வைத்தனர். அதோடு பராமரிப்பு தொகையை குடும்பமாக இருப்பவர்களிடம் 2500 வசூலிக்கப்படுகிறது. ஆனால், பேச்சுலர்ஸ் இடம் ஒன்பதாயிரம் வசூலிக்கப்படுவது தவறு என்றும் குற்றம் சாட்டியிருந்தார்கள்.

ஆதரவு அளித்த ஷகீலா:

இதைப் பற்றி அறிந்த நடிகை சகிலா இரவு என்று கூட பார்க்காமல் அந்த பகுதிக்கு சென்று அவர்கள் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டார். இந்த போராட்டத்தில் ஆண்கள் மட்டும் இல்லாமல் பெண்களும் இருந்தார்கள். அப்போது அநியாயம் செய்யாமல் முறையாக தண்ணீர் பிரச்சனை தீர்க்க வேண்டும் மற்றும் பராமரிப்பு தொகை உயர்வதை நிறுத்த வேண்டும் என்றும் சகிலா கூறியிருந்தார். அது மட்டும் இல்லாமல் அந்த அப்பார்ட்மெண்டுக்கும் சகிலாவுக்கும் எவ்வித தொடர்பு இல்லை என்றாலும் நியாயத்துக்காக அவர் குரல் கொடுத்து இருக்கிறார். இது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் வைரலானது. இதை பார்த்த பலரும் ஷகிலாவுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Advertisement