பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப்போகும் திருநங்கை.! யாருனு பாருங்க.!

0
1112
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த இரண்டு வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விரைவில் துவங்க இருக்கிறது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த நிகழ்ச்சியை ப்ரோமோ வீடியோ ஒன்று நேற்று (மே 15)வெளியானது. கடந்த இரண்டு சீசன்களில் போலவே இந்த சீசனையும் உலக நாயகன் கமல் தான் தொகுத்து வழங்க இருக்கிறார் என்பது இந்த ப்ரோமோ மூலம் உறுதியானது.

-விளம்பரம்-
Image result for சாக்ஷி ஹரேந்திரன்

மேலும், மூன்றாவது சீஸனில் பங்கு பெறப் போகும் போட்டியாளர்களின் பெயர்கள் அடிக்கடி சமூக வலைதளத்தில் அடிபட்டு வருகிறது. இதுவரைஎம் எஸ் பாஸ்கர் ஆல்யா மானசா போன்றவர்கள் பெயர்கள்தான்வைரலாக அடிபட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த சீசனில் கலந்து கொள்ள போகும் அடுத்த போட்டியாளரின் பட்டியலில் பிரபல திருநங்கையான சாக்ஷி ஹரேந்திரன் பெயரும் அடிபடுகிறது.

இதையும் படியுங்க : அசினின் மகளா இப்படி வளர்ந்துட்டாங்க.! நீண்ட நாட்களுக்கு பின் அசின் வெளியிட்ட புகைப்படம்.!

- Advertisement -

கலர்ஷ் தமிழ் சேனலில் துவங்கிய சிங்கிங் ஸ்டார் நிகழ்ச்சியில் சிங்கபூரை சேர்ந்த திருநங்கை சாக்ஷி ஹரேந்திரன் பங்கு பெற்றார். ஒரே சமயத்தில் ஆண் மற்றும் பெண் என இரு குரலில் பாடி மேடையில் இருப்போர்களை மட்டுமில்லாமல் அனைவரையும் ஆச்சர்யத்தில் திக்குமுக்கட வைத்து வருகிறார்.

Related image

சாக்ஷி தனது 14 வயதிலேயே மேடையேறி பாட்டு பாடியுள்ளார். முறையாக பாட்டு கற்றுக்கொள்ளவில்லையென்றாலும் பாடலை கேட்டு அதனைப் போலவே பாடும் திறமை கொண்டவராக சாக்ஷி இருந்துள்ளார். தற்போது இவர், பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள போவதாக நம்பகரமான தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கன்னடத்தில் வில் சுதிப் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 6வது சீசனில் ஆடம் பஷா என்ற திருநங்கை கலந்து கொண்டார் என்பது குறிப்பிடதக்கது.

-விளம்பரம்-
Advertisement