பெண்களின் நடத்தை பற்றி ‘சக்திமான்’ சர்ச்சைப் பேச்சு – குவியும் கண்டனங்கள்.

0
397
sakthimaan
- Advertisement -

பெண்கள் குறித்து சக்திமான் தொடரின் நாயகன் நடிகர் முகேஷ் கண்ணா தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இருக்கும் 2k கிட்ஸ்களுக்கு மார்வெல், டிசி என எத்தனையோ சூப்பர் ஹீரோக்கள் தற்போது இருந்தாலும் இந்தியாவில் எல்லாவற்றுக்கும் முன்னோடியே இந்த ‘சக்திமான்’தான்.இந்த சக்தி மான் தொடரை வைத்து 90 ஸ் கிட்ஸ்களைடைய பல்வேறு நிறுவனங்களும் வியாபாரம் செய்துள்ளது. சக்தி மான் ஸ்டிக்கர்களை வாங்க பல்வேறு பொருட்களை வாங்கிய 90ஸ் கிட்ஸ்கள் தான் அதிகம். மேலும், வீட்டின் கண்ணாடி, பீரோ, ரப் நோட் என்று சக்தி மான் ஸ்டிக்கர் இல்லாத ஒரு 90ஸ் கிட்ஸ்களை கூட பார்க்காமல் இருக்க முடியாது. அந்த அளவுக்கு சக்திமான் தொடர் இந்தியாவில் பெரும் தாக்கதை சிறுவர்கள் இடையே ஏற்படுத்தியது.

-விளம்பரம்-

அமெரிக்காவில் மட்டுமில்லாமல் இந்தியா உடபட பல நாடுகளில் பெரும் புயலைக் கிளப்பியது METOO. சமூக வலைதளத்தில் இயங்கும் பெண்களில், சுமார் 45 சதவீதத்திற்கு மேற்பட்டோர், metoo hash tag-யை பதிவிட்டு, தங்களுக்கு நேர்ந்த பாலியல் சீண்டல்களை குறிப்பிடத் தொடங்கினர்.இதில் அதிகம், சர்ச்சையில் சிக்கியது பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் Harvey Weinstein தான். இவர் மீது மட்டும் சுமார் 80 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தனர். அதன் விளைவாக, அமெரிக்க போலீஸ் அவரை கைது செய்தது.இந்தியாவிலும், இந்த hash tag பல்வேறு அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. பிரபல பாலிவுட் நகைச்சுவை நடிகர், Utsav Chakraborty மீது ஒரு இளம்பெண் புகார் தெரிவித்தார். தொடர்ந்து பல பெண்கள் புகார் தெரிவிக்க, வேறு வழியில்லாமல், Utsav Chakraborty-யும் மன்னிப்பு கேட்டார். இதே போல பிரபல எழுத்தாளர் சேத்தன் பகத் மற்றும் ராஜத் கபூரும், #Metoo hash tag-ல் சிக்கி, பின்னர் மன்னிப்பு கேட்டார்.

- Advertisement -

2020 ஆம் ஆண்டும் பெண்கள் பற்றி பேசி சர்சைக்குள்ளான முகேஷ் கண்ணா :-

இந்த நிலையில் சக்தி மான் ஹீரோ முகேஷ் கண்ணா 2020ஆம் ஆண்டு மீடூ இயக்கம் குறித்து சமீபத்தில் பேசியதாவது ”பெண்களின் வேலை வீட்டைப் பார்த்துக் கொள்வது. வேலை செய்ய ஆரம்பித்தவுடன்தான் இந்த மீ டூ பிரச்சனை தொடங்கியது. ஆண்களுடன் தோளோடு தோள் சேர்ந்து நடக்க வேண்டும் என்று இன்று பெண்கள் பேசி வருகின்றனர்” என்று கூறியிருந்தார். இவரின் இந்த கருத்து சமூக வலைதளத்தில் மிகப்பெரும் சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் முகேஷ் கண்ணாவின் இந்த கருத்திற்கு பிரபல பின்னணி பாடகியான சின்மயி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

முகேஷ் கண்ணா போன்றவர்கள் மாறபோவதில்லை :-

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள சின்மயி “பெண்கள் வேலைக்குச் செல்ல ஆரம்பித்த பிறகுதான், ‘மீ டூ’ பிரச்சினை வந்ததாக முகேஷ் கண்ணா கூறியிருக்கிறார். ஆண்கள் தங்கள் கைகளைக் கட்டுப்படுத்தாமல் இருப்பதால் வரவில்லையாம். இவரை போன்ற மனநிலை உடையவர்களால் எனக்குச் சோர்வு வருகிறது. இவர்கள் மாறப்போவதும் இல்லை, நச்சுக் கருத்தை தங்களுக்குள் வைத்துக் கொள்ளப்போவதும் இல்லை” என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

குடும்ப பெண்களை பாலியல் தொழில் செய்யும் பெண்களுடன் ஒப்பிட்டு பேசினார் :-

தற்போது மீண்டும் பெண்கள் குறித்து தரகுறைவாக பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார் நடிகர் முகேஷ் கண்ணா. முகேஷ் கண்ணா பீம்ஷா இன்டர்நேஷனல் என்ற ஒரு யூடியுப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் வெளிவந்த ஒரு வீடியோவில் தான் முகேஷ் கண்ணா குடும்ப பெண்களை பாலியல் தொழில் செய்யும் பெண்களுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார். அவர் இவ்வாறு பேசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அதுமட்டுமில்லாமல் இதை பார்த்த சமூக ஆர்வலர்கள் முகேஷ் கண்ணா இவ்வாறு பேசியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றவாறு கண்டனங்களை தெரிவித்துள்ளனர். சமீபகாலமாகவே நடிகர் முகேஷ் கண்ணா கூறும் கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாகவே உள்ளது.

நாகரீகமான பெண்கள் இவ்வாறு நடக்கமாட்டர்கள் ;-

தனது யூடியுப் சேனலில் முகேஷ் கண்ணா வெளியிட்ட வீடியோவில் அவர் பேசியது ஆண்களை உடலுறவு அழைக்கும் பெண்கள் பெண்களே இல்லை எனவும் அதுமட்டுமில்லாமல் உடலுறவு குறித்த தனது ஆசையை ஆண்களிடம் தெரிவிக்கும் பெண்களை பாலியல் தொழில் செய்யும் பெண்களுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார் முகேஷ் கண்ணா. மேலும் நாகரிகமான பெண்கள் இவ்வாறெல்லாம் நடந்து கொள்ள மாட்டார்கள் எனவும் தன் கருத்தை தெரிவித்துள்ளார். முகேஷ் கண்ணா இவ்வாறு பெண்கள் குறித்து தரக்குறைவாக பேசியது தவறான செயல் எனவும் இதற்காக முகேஷ் கண்ணா அனைவரிடத்திலும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பெண்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் கொந்தளித்து எழுந்துள்ளனர்.

Advertisement