அந்த படம் வெளிவரும் வரை வேறு எந்த படத்தையும் பார்க்க மாட்டேன் – விஜய்க்காக Sk போட்ட 9 வருட பழைய ட்வீட் தற்போது வைரல்.

0
617
sivakarthikeyan
- Advertisement -

விஜய் படம் குறித்து 9 ஆண்டுகளுக்கு முன் சிவகார்த்திகேயன் பதிவிட்ட பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பல ஆண்டு காலமாக கோலிவுட்டில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் விஜய் அவர்கள் நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.

-விளம்பரம்-

இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ், யோகி பாபு உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். பல எதிர்பார்ப்புடன் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் ஆவார். இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார்.

- Advertisement -

வாரிசு படம்:

இயக்குனர் வம்சி – தயாரிப்பாளர் தில் ராஜு ஆகிய இருவரும் இணைந்து பல படங்களில் பணியாற்றி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்தில் சரத்குமார், ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர் என்று பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைகிறார்.

தளபதி 67 படம்:

தற்போது படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் படமாக உருவாகிறது என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து லோகேஷ் இயக்கத்தில் தளபதி 67 என்ற படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் விஜய்யின் தலைவா படம் குறித்து சிவகார்த்திகேயன் பதிவிட்ட பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, சில வருடங்களாகவே விஜயின் திரைப்படங்கள் பல சிக்கலில் சிக்கி அதற்குப் பிறகுதான் வெளிவந்திருக்கிறது.

-விளம்பரம்-

தலைவா படம்:

அதிலும் அரசியல் காரணமாக பல பிரச்சினைகள் ஏற்பட்டு இருந்தது. அதில், விஜய் நடிப்பில் 2013-ம் ஆண்டு வெளியாகி இருந்த தலைவா திரைப்படமும் ஒன்று. இந்த படத்தின் டைட்டில் தான் பிரச்சனை என்று அந்த படம் வெளிவருவதில் சர்ச்சை ஏற்பட்டு இருந்தது. இதனால் தலைவா படம் வெளியாவது குறித்த தேதி பல சிக்கல்கள் ஏற்பட்டது. ஆனால், அந்த படம் முதல் நாளே இணையத்தில் வெளியாகி விட்டது. மேலும், தலைவா திரைப்படம் குறித்து பல பிரபலங்களும் தங்களுடைய கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.

நடிகர் சிவகார்த்திகேயன்:

அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயனும் தலைவா படம் குறித்து டீவ்ட் போட்டிருந்தார். அதில் அவர், தலைவா திரைப்படம் வெளியாகும் வரை மற்ற எந்த ஒரு படங்களையும் பார்க்க போவது இல்லை. என்ன பிரச்சனை என்பது தெரியவில்லை? ஆனால், தலைவா திரைப்படம் விரைவில் வெளியாகும் என நம்புகிறேன் என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவை தற்போது ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறார்கள்.

Advertisement