திரௌபதி படத்தை பார்த்துவிட்டு ஷாலினி சொன்ன விஷயம். படத்தின் இசையமைப்பாளார் போட்ட ட்வீட்.

0
43643
- Advertisement -

பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய விஜி மோகன் இயக்கத்தில்கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியான திரௌபதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. பெரிய நட்சத்திர நடிகர்கள் கிடையாது இயக்குனருக்கு பெரிதாக அனுபவமும் கிடையாது இருப்பினும் இந்த படம் எதிர் பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது. இந்த படத்தில் ஹீரோவாக பிரபல நடிகை பேபி ஷாலினியின் அண்ணனும், அஜித்தின் மைத்துனருமான ரீச்சர்ட் நடித்துள்ளார். அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் 2002 ஆம் ஆண்டு வெளியான காதல் வைரஸ் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-46-1024x768.jpg

- Advertisement -

அதன் பின்னர் கிரிவலம் நாளை யுகா தமிழகம் பெண் சிங்கம் போன்ற பல்வேறு தமிழ் படங்களில் நடித்திருக்கிறார் என்னதான் அஜித்தின் மைத்துனர் ஆக இருந்தாலும் இவருக்கு சினிமாவில் ஒரு நிலையான அங்கீகாரம் கிடைக்கவில்லை இறுதியாக 2016 ஆம் ஆண்டு வெளியான அந்தமான் என்ற படத்தில் நடித்திருந்தார் அதன்பின்னர் இவர் வேறு எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை.தற்போது நான்கு ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் திரௌபதி படத்தின் மூலம் ஒரு மாஸ் என்ட்ரியில் மீண்டும் தமிழ் சினிமாவில் களம் இறங்கியிருக்கிறார்.

இதையும் பாருங்க : இப்படி தான் ராஜபாட்டை பர்ஸ்ட் லுக்கும் இருந்துச்சி. கிண்டல் செய்தவருக்கு பிகில் பட விஜய் புகைப்படத்தின் மூலம் பதில் அளித்த இயக்குனர்.

திரௌபதி திரைப்படம் வெளியாவதற்கு முன்பாகவே பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தது. இந்த படத்தின் டிரைலர் வெளியான போதே இந்த படத்தில் குறிப்பிட்ட சமூகத்தினரை தாக்கி பல்வேறு வசனங்கள் இடம் பெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனால் இந்த படத்தில் இடம்பெற்ற பல்வேறு வசனங்கள் சென்சார் செய்யப்பட்டுள்ளது. அதேபோல, இந்த படம் சமூகத்தில் நிலவும் பல பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லும் வகையில் உருவாகி உள்ளது. இந்த படத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்

-விளம்பரம்-

சமீபத்தில் கூட பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் தனது குடும்பத்தார் மற்றும் தொண்டர்களுடன் சென்று இந்த படத்தை பார்த்தால் இந்த நிலையில் அஜித்தின் மனைவியும் இந்த படத்தின் ஹீரோவான ரிச்சர்ட்டின்ன் சகோதரியுமான ஷாலினி மற்றும் ரிச்சர்டின் மற்றொரு சகோதரியான சமீலா, அஜித்தின் மகள் அனுஷ்கா ஆகியோர்கள் இந்த படத்தினை ரோகிணி திரையரங்கத்தில் கண்டுகளித்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட அந்த புகைப்படம் நேற்று வைரலாக பரவியது.

இந்த புகைப்படம் வைரலானதால் நேற்று #ShaliniAjith என்ற ஹேஷ்டேக்கும் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் வந்தது. இந்த நிலையில் இந்த படத்தை பார்த்துவிட்டு ஷாலினி, இந்த படத்தின் இசையை பாராட்டியுள்ளதாக இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜூப்லின் என்பரிடம் ஷாலினி கூறியுள்ளதாக திரௌபதி படத்தின் இசையமைப்பாளர் ஜூப்லின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement