குறையும் பட வாய்ப்புகள் – இன்ஸ்டாவில் நீச்சல் உடை புகைப்படங்களை அள்ளி வீசி வலைவிரிக்கும் ஷாலினி பாண்டே.

0
481
shalini
- Advertisement -

தெலுகு சினிமாவின் லேட்டஸ்ட் ட்ரெண்டிங் ஹீரோவான விஜய் தேவர்கொண்டா நடிப்பில் கடந்த 2017 ஆண்டு வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. தெலுங்கில் இந்த படம் சூப்பர் ஹிட் ஆனதை தொடர்ந்து தமிழ், ஹிந்தி என்று பல்வேறு மொழிகளிலும் ரீ-மேக் செய்யப்பட்டது. ஆனால், அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்த ஷாலினி பாண்டேவிற்கு இணையாக வேறு யாரும் அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இல்லை என்பது தான் ராசிகர்களின் கருத்து. அந்த அளவிற்கு அந்த படத்தில் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார் ஷாலினி பாண்டே.

-விளம்பரம்-

பப்லியான தோற்றம், சிரித்தால் கன்னத்தில் குழி விழும் அழகிய முகம் என்று தெலுங்கு சினிமாவில் நியூ எண்ட்ரியாக வந்த இவருக்கு தமிழ் சினிமாவிலும் ரசிகர் பட்டாளம் அதிகமாக துவங்கியது. கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ‘நடிகையர்திலகம் படத்தில் நடித்திருந்தார். மேலும், ஜி வி பிரகாஷுடன் ‘100% காதல்’ படத்தில் நடித்திருந்தார். ஆனால், அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற தவறியது.

- Advertisement -

இதையும் பாருங்க : பிரபல பெண் இயக்குனரின் அடுத்த படத்தில் இணைந்த இசைஞானி இளையராஜா – யாருன்னு பாத்தா ஷாக்காவிங்க.

தமிழில் முதல் படம் :

இறுதியாக இவர் ஜீவா நடிப்பில் வெளியான ‘கொரில்லா’ படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த படமும் சரியாக ஓடவில்லை. அதன் பின்னர் அனுஷ்காவுடன் நிசப்தம் படத்தில் நடித்து இருந்தார். தற்போது அம்மணிக்கு தமிழில் வாய்ப்பு எதுவும் இல்லை.இந்தியில் மட்டும் தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

குறைந்த பட வாய்ப்புகள் :

தொடர்ந்து படத்தில் நடித்து வந்தாலும் அம்மணிக்கு ஹீரோயின் கதாபாத்திரம் கொஞ்சம் குறைவாக தான் இருக்கிறது. இதனால் அம்மணி மற்ற நடிகைகள் பயன்படுத்தும் கவர்ச்சி யுத்தியை தற்போது பயன்படுத்தி பட வாய்ப்புகளுக்கு வலை விரித்துள்ளார். அதே போல சமீபத்தில் உடல் எடையை குறைத்து ஆளே மாறி இருக்கிறார். ஆனால், பல ரசிகர்கள் நீங்கள் பப்லியாக இருப்பது தான் அழகு என்று கூறி வந்தனர்.

பாலிவுட் பட வாய்ப்பு :

இறுதியாக இவர் ம்யூஸிக் ஆல்பம் ஒன்றில் நடனமாடி இருந்தார். ஆனால், அதுவும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. அதே போல அம்மணியை அறிமுகம் செய்து வைத்த தெலுகு சினிமாவிலும் இவருக்கு வாய்ப்புகள் அமையவில்லை.இதனால் பாலிவுட்டில் வாய்ப்புகளை தேடினார். இதனால் தான் இவர் தனது உடல் எடையையும் குறைத்தார். அதோடு அடிக்கடி கவர்ச்சியான புகைடபங்களையும் பதிவிட்டு வந்தார்.

பீச் புகைப்படங்கள் :

இப்படி ஒரு நிலையில் இவருக்கும் இந்தியில் வாய்ப்பும் கிடைத்தது. இறுதியாக இந்தியில் Jayeshbhai Jordaar என்ற படத்தில் நடித்து இருந்தார். ஆனால், அந்த படமும் சரியான வரவேற்பை பெறவில்லை. இதனால் மீண்டும் அடிக்கடி போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். இப்படி ஒரு நிலையில் அடிக்கடி டூர் செல்லும் இவர் சமீபத்தில் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி புகைப்படங்களை அள்ளி வீசி இருக்கிறார்.

Advertisement