பிரபல பெண் இயக்குனரின் அடுத்த படத்தில் இணைந்த இசைஞானி இளையராஜா – யாருன்னு பாத்தா ஷாக்காவிங்க.

0
447
ilayaraja
- Advertisement -

லட்சுமி ராமகிருஷ்ணனின் படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஜீ தமிழில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகை. இருந்தாலும் இவரை மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி தான்.

-விளம்பரம்-

அந்த நிகழ்ச்சியில் குடும்ப பிரச்சனையால் பிரிந்த குடும்பத்தை பஞ்சாயத்து செய்து சேர்த்து வைப்பது ஆகும். இவர் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் நடிகையாக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் திரையுலகில் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் முதன்முதலாக 2012 ஆம் ஆண்டு வெளிவந்த ஆரோகணம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார்.

- Advertisement -

அதற்கு பிறகு இவர் நெருங்கி வா முத்தமிடாதே, அம்மானி, ஹவுஸ் ஓனர் போன்ற பல படங்களை இயக்கி இருக்கிறார். ஆனால், இவர் இயக்கிய படங்கள் எதுவும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இது ஒரு பக்கம் இருக்க, இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருப்பார். சமூக பிரச்சனை குறித்தும், பிரபலங்களின் சர்ச்சை பிரச்சனைக்கும் பதிவு போட்டு வருவார். அந்த வகையில் இவர் வனிதாவின் நான்காம் திருமணத்திற்கு பஞ்சாயத்து செய்து வனிதாவிடம் வாங்கி கட்டிக்கொண்டது அனைவரும் அறிந்த ஒன்று தான்.

அதோடு இவரது நிகழ்ச்சியில் வந்த பெண் ஒருவர் சமீபத்தில் சாமியார் ஆனதை பார்த்து அதற்கும் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டார். கடந்த மாதம் கர்நாடகாவில் நடந்த ஹிஜாப் பிரச்சனைக்கு ஆதரவாக லட்சுமி ராமகிருஷ்ணன் பேசி இருந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. சமீபத்தில் இவர் யுத்தம் செய் படத்தில் மொட்டை அடித்ததற்கான காரணத்தை கூறியிருந்தார். இப்படி இவர் சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்டிவாக இருக்கிறார்.

-விளம்பரம்-

லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கும் படம்:

இதனால் இவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். இந்நிலையில் இவர் அடுத்து இயக்கும் படம் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, இவர் தான் இயக்கும் படத்திற்காக இளையராஜா உடன் கூட்டணி வைத்திருக்கிறார். இவர் இயக்கும் படத்திற்கு இசைஞானி தான் இசை அமைக்கிறார். அதற்கான ரீ-ரெக்கார்டிங்கில் லட்சுமி காத்திருக்கிறார். மேலும், இவர் இயக்கும் படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை.

லட்சுமி ராமகிருஷ்ணன்-இசைஞானி:

இந்த படத்தில் சமுத்திரக்கனி, அபிராமி, மிஷ்கின், ரோபோ சங்கர் உட்பட பல நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மேலும், இதை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அவர்கள் இளையராஜாவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு புகழ்பெற்ற மேஸ்ட்ரோ படத்தில் இருப்பது பாக்கியம். இது ஒரு அனுபவம். இது எனது அடுத்த படத்தின் RR அமர்வுகளுக்காக காத்திருக்கிறேன். இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

Advertisement