‘ஊ சொல்றியா மாமா’ பாடலுக்கு செம ஆட்டம் போட்ட ஷாலு ஷம்மு – வைரலாகும் வீடியோ இதோ.

0
873
shalu
- Advertisement -

சமூக வலைதளத்தில் கவர்ச்சி புகைப்படங்கள் மூலம் பிரபலமடைந்தவர்கள் பல பேர் இருக்கின்றனர். அந்த வகையில் சமூக வளைத்தளத்தில் தற்போது இளசுகளின் சென்சேஷன் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை ஷாலு ஷம்மு. நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சூரியின் காமெடி கலாட்டாகள் நிறைந்த வறுத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.மேலும் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்த ஸ்ரீவிதாவுடன்  படம் முழுவதும் தோழியாக நடித்தவர் தான் ஷாலு சம்மு.  வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்கு பின்னர் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

பஜடா நடனம் :

மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மிஸ்டர் லோக்கல் படத்திலும் நடித்திருந்தார். இவர் நடித்த படங்களை விட சமூக வலைதளத்தில் இவர் பதிவிட்ட வீடியோக்கள் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். ஷாலு ஷம்மு ஆண் நண்பர்களுடன் பஜாடா நடனமாடும் இரண்டு விடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது.

இதையும் பாருங்க : 10 ஆண்டாக நிரூப் பேசாமல் இருக்கும் அவரின் தம்பி இவரா ? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.

- Advertisement -

இளசுகளை கவர்ந்த ஷாலு :

எப்படியும் பட வாய்ப்புகளுக்காக தான் அம்மணி இது போன்ற புகைப்படங்களையும் விடீயோக்களையும் பதிவிட்டு வந்தார்.ஷாலு ஷம்மு முதலில் நடித்த இரண்டு படத்திலும் கிராமத்து குயிளாக தெரிந்த இந்த நடிகை நேரில் பார்த்தால் மிகவும் மாடர்ன் மங்கையாக இருக்கிறார். அதற்கு முக்கிய காரணமே அம்மணி மாடலிங் துறையிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் பதிவிடும் புகைப்படங்கள் இளசுகளை சுண்டி இழுத்து விடுகிறது.

ஷாலுவின் ‘ஊ சொல்றியா மாமா’ :

அதே போல தனது கவர்ச்சியை யார் விமர்சனம் செய்தாலும் அம்மணி ஐ டோன்ட் கேர் என்று தட்டிவிட்டு விடுகிறார். இறுதியாக இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகமாக வந்த ”இரண்டாம் குத்து ” படத்தில் நடித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் இவர் சமீபத்தில் வெளியான ‘புஷ்பா’ படத்தில் இடம்பெற்ற ‘ஊ சொல்றியா மாமா’ பாடலுக்கு நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

சூப்பர் ஹிட் அடித்த புஷ்பா :

அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியான புஷ்பா திரைப்படம் மாபெரும் எதிர்பார்புகளுக்கு மத்தியில் வெளியானது. மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். பகத் பாசில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் வெளியானது.

இந்த படத்தில் இடம்பெற்ற ‘வாயா சாமி ‘ பாடலை விட சமந்தா ஆடிய ‘ஹ்ம் சொல்றியா’ பாடல் தான் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த ஒரு பாடலில் ஆட நடிகை சமந்தாவிற்கு 1.30 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது. மேலும், திரையரங்கில் இந்த பாடலை ரசிகர்கள் ஒன்ஸ் மோர் கேட்டு வந்தனர். இப்படி ஒரு நிலையில் இந்த பாடலுக்கு ஆட்டம் போட்டு வீடியோ வெளியிட்டுள்ளார் ஷாலு ஷம்மு.

Advertisement