10 ஆண்டாக நிரூப் பேசாமல் இருக்கும் அவரின் தம்பி இவரா ? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.

0
634
niroop
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி 91 நாட்களை கடந்து மிகவும் பரபரப்பாக என்று கொண்டு இருக்கிறது. இதுவரை 12 பேர் வெளியேறி இருக்கும் நிலையில் பிரியங்கா, தாமரை செல்வி, ராஜு, பாவனி, சஞ்சீவ், சிபி, அமீர், நிரூப் என்று 8 பேர் மட்டும் இருக்கின்றனர். இதில் இந்த வாரம் அனைவரும் நாமினேட் ஆகி இருக்கும் நிலையில் பிக் பாஸில் மிகவும் எதிர்பார்கப்படும் Ticket To Finale டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த டாஸ்கில் முதல் நாளே நிரூப் வெளியேறி இருந்தது பலருக்கும் ஏமாற்றத்தை கொடுத்தது.

-விளம்பரம்-

நிரூப் இருந்து இருந்தால் இந்த Ticket To Finale டாஸ்க் வேறு விதமாக சென்று இருக்கும் அதிலும் முட்டை டாஸ்க்கில் எல்லாம் அவன் எல்லார் முட்டையையும் உடைத்து இருப்பான் என்று பிரியங்காவே கூறி இருந்தார். நிருப்பிற்கு பிக் பாஸ் வாய்ப்பை வாங்கி கொடுத்தது அவரது முன்னாள் காதலையான யாஷிகா என்பதை அவரே கூறி இருக்கிறார். அதே போல பார்க்க பயங்கரமாக இருந்தாலும் நிஜத்தில் நிரூப் ஒரு வெகுளி என்பதை பல முறை நிரூபித்து இருக்கிறார்.

- Advertisement -

10 ஆண்டு பேசாமல் இருக்கும் நிரூப்:

இப்படி ஒரு நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் பிக்பாஸ் வீடு கற்றுக்கொடுத்த பாடம் என்ற டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது இதில் பிக் பாஸ் வீட்டில் கிடைத்த அனுபவத்தின் மூலம் நீங்கள் கற்றுக்கொண்ட பாடம் என்ன என்பதை சொல்லவேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.இதில் ஒவ்வொரு போட்டியாளரும் இந்த பிக் பாஸ் வீட்டில் இருந்து எதை பாடமாக எடுத்து செல்வோம் என்பதை சொல்லி இருந்தார்கள். இதில் நிரூப் பேசிய போது ராஜுவிடம் இருந்து நிதானத்தை கற்றுக் கொண்டேன் அது என்னிடம் இல்லாத ஒரு விஷயம்.

நிரூப்பின் தம்பி :

மேலும், என் தம்பியுடன் பேசிய பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது நாங்கள் ஒரே வீட்டில் தான் இருப்போம். ஆனாலும், என் தம்பியிடம் நான் பேசினது கிடையாது. ஆனால், இங்கே வந்து யாரென்றே தெரியாத பதினெட்டு நபர்களுடன் நாம் பேசி நன்றாகத்தான் இருக்கிறோம். ஆனால், இந்த விஷயத்தை என் தம்பியிடம் செய்ய முடியவில்லை என்ற ஒரு கோபம் எனக்கு இருக்கிறது.என் அப்பா கூட வந்த போது சொன்னார் உனக்கு வெளியிலிருந்து டிரஸெல்லாம் கொடுப்பது உன் தம்பி தான்டா அவனிடம் பேசு என்று சொன்னார்.

-விளம்பரம்-

சிறு வயதில் ஏற்பட்ட சண்டை :

அவனிடம் நான் பேசாமல் இருப்பதற்கு காரணம் சின்ன வயதில் ஒரு சண்டை நடந்தது அதிலிருந்துதான் நான் அவனிடம் பேசாமல் போய் விட்டேன் ஆனால் இங்கே யார் என்றே தெரியாத நபர்கள் ஒவ்வொருவர் மீதும் காட்டும் அன்பை பார்க்கும்போது என் அம்மா வயிற்றில் பிறந்த என் சொந்த தம்பி மீது ஏன் என்னால் இந்த அன்பை காட்ட முடியவில்லை என்பதுதான் எனக்கு தெரியவில்லை என் அப்பா உள்ளே வந்தபோது கூட நான் கட்டிப்பிடித்தேன்.

நிரூப்பின் தம்பி இதுவா ?

Here's what Nirup Bhandari had to say about his brother, Anup Bhandari, on  the latter's birthday | Kannada Movie News - Times of India

அப்போது என் அப்பா கேட்டார் ‘என்னடா வெளியில் கட்டி பிடிக்க மாட்டே இங்க கட்டி எல்லாம் பிடிக்கிற’ என்று கேட்டார். அது என் தந்தைக்கு புதிதாக இருந்தது. ஆனால், எனக்கு நான் ஏதோ ரொம்ப நாளா செய்யும் விஷயமாக தான் இருந்தது என்று கூறியிருந்தார். இப்படி ஒரு நிலையில் நிரூப் சிறு வயதில் தன் தம்பியுடன் எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. ஆனால், இது தான் உண்மையில் நிரூப்பின் தம்பியா என்பது உறுதியாக தெரியவில்லை.

Advertisement