சிம்ரன்,ஜோதிகாவை குதிரை என்று அழைத்துள்ள விஜய் – திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள், விஜய் ரசிகர்கள் கொடுக்கும் முட்டு.

0
729
vijay
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். மேலும் இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் வெளிவந்த வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த படம் பீஸ்ட். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. ஆனால், வசூலில் சாதனை செய்து இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து தற்போது இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் ஆவார்.

-விளம்பரம்-

வாரிசு படம்:

இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். மேலும், வாரிசு படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் மந்தனா, நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு என்று பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவாளராக இருக்கிறார். தற்போது இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.

- Advertisement -

இதையும் பாருங்க : ‘இந்த தீவுக்கு போனவங்க யாரும் உயிரோட திரும்பனது இல்ல’ – பழங்குடி மக்களின் வாழ்க்கையை தத்ரூபமாக விளக்கும் ‘புதிர்’ ட்ரைலர்.

பொங்கல் வெளியீடு :

சமீபத்தில் தான் இந்த படத்தின் ரஞ்சிதமே என்ற முதல் பாடல் வெளியாகி இருந்தது. ஆனால், இந்த பாடல் குறித்தும் விஜய் நடனம் குறித்தும் இணையத்தில் பல சர்ச்சைகள் எழுந்து இருந்தது. மேலும், இந்த படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது. விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிடும் உரிமையை 7ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் வாங்கி இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

விஜய் குறித்து ஷாம் :

இந்நிலையில் இப்படத்தில் நடித்திருந்த ஷாமிடம் பிரபல செய்தி ஊடகம் ஓன்று பேட்டியெடுத்திருந்தது. நடிகர் ஷாம் “வாரிசு” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் முதன்முறையாக தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்யுடன் “குஷி” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக்கினார். இப்படத்தில் கதாநாயகன் விஜய்க்கு நண்பராக நடித்திருந்தார். இந்நிலையில் அந்த நேர்காணலின் மூலம் ஷாம், தளபதி விஜய்யுடனான தனது உறவு அந்த படத்திற்கு பிறகு எவ்வாறு வளர்ந்து வருகிறது என்பதைப் பற்றி பகிர்ந்து கொண்டார்.

குஷி பட அனுபவம் :

அவர் கூறுகையில் குஷி திரைப்படத்தில் நடிக்கும்போது அவரை நான் பெயர் சொல்லிதான் அழைத்தேன். ஒரு முறை குஷி ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்யிடம் `ஹலோ விஜய் என்னப்பா அடுத்த சூப்பர்ஸ்டார் நீங்கதான்னு பேசிக்குறாங்க என்று கேட்டேன் அதற்கு விஜய் வானத்தின் மேலே கையை காட்டினார். ஆனால் தற்போது பலரும் எட்டமுடியாத இடத்தில் நடிகர் விஜய் இருக்கிறார். அதற்கு பிறகு நான் கதாநாயகனாகி விட்டேன்.

சிம்ரன், ஜோதிகா குறித்து விஜய் :

அந்த நேரத்தில் நான் விஜய் அவர்களை சந்தித்தேன் அப்போது அவர் ‘என்னடா ஜோதிகா மற்றும் சிமரன் என்ற இரண்டு குதிரைகளுடன் வர’ என்று கேட்டார். அதற்கு நானும் அவர் சொல்லியதை போல அதே கடவுளின் செயல் என்று நான் அவருக்கு பதிலளித்தேன்” என்று ஷாம் பேட்டியில் கூறினார். இப்படி ஷாம் பேசி இருக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வர நடிகையை குதிரை என்று சொல்வதா என்று விஜய்யை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

விமர்சிக்கும் நெட்டிசன்கள் :

படத்தில் மட்டும் சிங்கப்பெண்னேனு பாடிவிட்டு இப்படி நிஜத்தில் மட்டும் பெண்கள் குதிரையா விஜய் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். ஆனால், விஜய் ரசிகர்கள் சிலரோ 12b படம் 2001ல் வெளியானது. அப்போது விஜய்க்கு 24/25 வயது தான் இருக்கும். அந்த வயசில் பேசறது தான் எல்லாம் என்று விஜய்க்கு முட்டு கொடுத்து வருகின்றனர். மேலும், சின்மயிக்கு தைரியம் இருந்தால் விஜய்யை கேள்வி கேட்க முடியுமா என்றும் கோர்த்துவிட்டு வருகின்றனர்.

Advertisement