#ShameOnVijaySethupathi இந்திய அளவில் ட்ரெண்டான ஹேஷ் டேக் – விஜய் சேதுபதி படத்திற்கு குவியும் எதிர்ப்புகள்.

0
2979
800
- Advertisement -

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்கை வரலாற்று படத்தில் நடிக்க நடிகர் விஜய் சேதுபதிக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தமிழ் சினிமாவில் ஸீரோ ஹெட்டர்ஸ் கொண்ட நடிகர்களில் நடிகர் விஜய் சேதுபதியும் ஒருவர். சினிமாவில் எந்த ஒரு பின்னணியும் இல்லாமல் நுழைந்து, ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரத்தில் தோன்றி தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் விஜய் சேதுபதி. ஹீரோவாக மட்டுமல்லாமல் ரஜினி, விஜய் போன்ற உச்ச நடிகர்களுக்கு வில்லனாகவும் நடித்து அசத்தியுள்ளார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் இவர் பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க இருக்கிறார். எம்.எஸ்.ஶ்ரீபதி என்பவர் இயக்கும் இந்த படத்தின் அறிவிப்புகள் கடந்த ஆண்டே வெளியாகி இருந்தது. அப்போதே  வி.சி.க, பெரியாரிய அமைப்புகள் உள்பட பல்வேறு தமிழ் அமைப்புகளும் `தமிழினத் துரோகி ராஜபக்‌ஷே-வின் ஆதரவாளரான முரளிதரனின் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது’ எனக் கோரிக்கை வைத்தனர். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று வெளியானது.

- Advertisement -

800 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் மோஷன் போஸ்டரில் நடிகர் விஜய் சேதுபதி அச்சு அசலாக முத்தையா முரளிதரன் போன்றே காணப்பட்டார். ஆனால், இந்த படத்தின் மோஷன் போஸ்டருக்கே பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. முத்தையா முரளிதரன் கண்டியில் பிறந்த தமிழர் என்றாலும் அவர் சிங்களர்களின் பக்கமே நிற்கக் கூடியவர். எனவே அவரின் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது” என்று கண்டன குரல்கள் எழுந்துள்ளன.

அவ்வளவு ஏன் விஜய் சேதுபதியை வைத்து தர்மதுரை படத்தை எடுத்த இயக்குனர் சீனு ராமசாமி கூட இந்த படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலக வேண்டும் என்று ட்வீட் செய்து இருந்தார். அதில். விஜய் சேதுபதியின் இதயம் உலகத்தமிழர்கள். விஜய் சேதுபதி நடிக்கும் `யாதும் ஊரே யாவரும் கேளீர்’ திரைப்படம் அதற்கு சான்று. ஈழத்தமிழர் உள்ளத்திற்கு அருமருந்து. உள்ளங்கைக்கு முத்தம். மக்கள் செல்வா… நீரே எங்கள் தமிழ் சொத்து அய்யா நமக்கெதற்கு மாத்தையா? மாற்றய்யா?” என்று பதிவிட்டு இருந்தார்.

-விளம்பரம்-

இது போக ட்விட்டரில் #ShameOnVijaySethupathi என்ற ஹேஷ் டேக் கூட ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் வந்துள்ளது. 2009-ம் ஆண்டு ஈழத் தமிழர்களின் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்ட முள்ளி வாய்க்கால் நாளன்று, `இன்றைக்குத்தான் நான் மகிழ்ச்சியாகத் தூங்குவேன். இதுதான் என்னுடைய மகிழ்ச்சியான நாள்’ என்று பேசியவர் முத்தையா முரளிதரன் என்று பலரும் கூறி வருகின்றனர். மேலும், தமிழரை அழித்த ஒரு நாட்டின் விளையாட்டு வீரரின் கதையில் நடிப்பதா என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

Advertisement